படம் எப்படியோ இருந்துட்டு போகட்டும் படத்தை திரையிட்ட தியேட்டர் ஓனர் பெரிய ஹீரோதான்..
லியோ திரைப்படம்..
நேற்று இரவு சுமார் 7.30 மணி இருக்கும்...
நமது தியேட்டர் ஊழியர்கள் அவரிடம் ஏதோ கூறி அனுப்பி வைக்கிறார்கள்...
நான் ஊழியர்களை அழைத்து என்னவென்று விசாரித்த வகையில்,
5 மணி காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர் 7:30க்கு தான் வந்திருக்கிறார்..
அதனால் செல்லாது என்று சொல்லிவிட்டோம் அண்ணா...
குழந்தைகள் சகிதமாக அவர்கள் திரும்பி போவது மனதை ஏதோ செய்கிறது...
சரி அவங்களை கூப்பிடுங் என்கிறேன்...
வந்தவர்கள் ஆபீஸ் வாசலில் நின்றார்கள் உள்ள வாங்கன்னு சொல்லி கூப்பிட்டோம்...
ஏங்க என்ன ஆச்சு ஏன் வரல என விசாரித்த வகையில், அவர் ஒரு மதுப்ரியர்...
மனைவி குழந்தைகள் வீட்டில் காத்திருக்க இவர் மது அருந்திவிட்டு அழைத்து வருவதற்கு தாமதம் ஆகி உள்ளது..
நான்கு டிக்கெட் பணம்.. இல்லனு ஆகிப்போச்சு..
கொஞ்சம் நிதானித்தேன்...
அவர் கூலி வேலை செய்து, மீண்டும் அதை சம்பாதிப்பது எவ்வளவு சிரமம்...
காத்தோடு போகலாமா? அந்த பணம் என யோசித்தேன்!
இந்த மாதிரி விஷயங்களை பட கம்பெனி ஏற்காது!
சரி தியேட்டர் சார்பாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி பணத்தை திரும்ப அளித்தேன்..
இரண்டு குழந்தைகளும் விஜய் பட ஸ்டில்லை உத்து உத்து பார்த்துக் கொண்டே வெளியே சென்றனர்..
மனதில் இடம் புரியாத ஒரு சங்கடம்...
அந்த குழந்தைகள் மாலையிலிருந்து எவ்வளவு ஆசையாக இருந்திருக்கும் விஜய் படம் பார்க்க போகிறோம் என்று...
அதோ பணத்தைப் பெற்றுக் கொண்டு கேட்டை தாண்டி வெளியே செல்கின்றனர்...
கனத்த இதயத்தோடு...
சரி வேலையை பார்ப்போம் என்று அடுத்த காட்சிக்கு ஆயத்தமானேன்...
திடீரென எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..
அடுத்த காட்சிக்கு அதே குடும்பம் குழந்தைகளோடு படத்திற்கு டிக்கெட் வைத்துக் கொண்டு உள்ளே வருகிறது...
ஏங்க வீட்டுக்கு போகலையா என்று நான் கேட்கிறேன்...
லேட்டானாலும் பரவால்ல அண்ணே... நான் தான் ஏமாத்திட்டேன்..
அதனாலதான்.. குழந்தைகளுக்காக மீண்டும் வந்துட்டேன்.
மது பிரியர் உள்ளே விழித்துக் கொண்டிருக்கும் அந்த அப்பா இப்படி பேசியது...
ஆக,மது தான் அவரை அந்த வழியில் திருப்பி விட்டிருக்கிறது...
ஆனால் அவருக்கு உள்ளே இருக்கும் அப்பா உயிர்ப்புடன் தான் இருக்கிறார்...
அவருடைய மனைவி அமைதியாக நிற்க...
நகை கடையில் புகுந்த பெண் போல இரண்டு குழந்தைகளும் விஜய் பட பேனர்களை பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறனர்...
இரண்டு பாப்கார்ன் வாங்கி, குழந்தைகள் கையில் கொடுத்து, குழந்தைகளை தியேட்டர்க்குள் அனுப்பி வைக்கிறேன்...
நடிகர் விஜய் படத்தை பார்க்க வேண்டும் என்ற சந்தோஷம் அந்த குழந்தை முகத்தில் பார்க்க,
ஏதோ சில பல லட்சங்கள் சம்பாதித்த ஒரு திருப்தி...
மது பிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
உங்களுக்குள் இருக்கும் ஒரு உன்னதமான மனிதனை மது எனும் அரக்கன் சாப்பிட அனுமதிக்காதீர்கள்!
அதோ அந்த குழந்தைகள் துள்ளி குதித்து தியேட்டருக்குள் ஓடுகின்றனர்...
இனம் புரியாத மகிழ்ச்சியுடன் எனது வேலையை தொடர்கிறேன்...
நன்றி என்றும் அன்புடன்..
No comments:
Post a Comment