Monday, October 30, 2023

"தேன்மொழி"

 பூவிழி வாசலிலே படத்தில “அண்ணே அண்ணே” பாடல் நாகூர் பாபுவா இசைஞானியின் இசையில் முதல் பாடலாக பாடிய பிறகு எங்க ஊரு பாட்டுகாரன் படத்தில தான் முழு பரிமாணத்துடன் மனோ என்று இசைஞானியால் நாமகரணம் சூட்டப்பட்டு இந்த படத்தின் டைட்டிங் சாங்கை தவிர அனைத்து பாடல்களையும் பாடி பேரும் புகழும் பெற்ற சூழல் பிள்ளையார் சுழியாகி போனது. இவருடைய மூன்றாவது படமான சொல்ல துடிக்குது மனசு படத்தில் வரும் “தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன்” பாடல் என்றென்றும் இவர் குரலில் ஆல் டைம் பேவரெட்டாக அமைந்தது. (இசைஞானியின் இசையில் மனோ பாடிய முதல் பாடல் "தேன்மொழி" என்பது குறிப்பிடதக்கது).

பாடலின் துவக்கத்தை இசைஞானி கோரஸில் ஆரம்பிச்சிருப்பாரு. கோரஸை தொடர்ந்து வயலின்களின் ஸ்பரிசத்துடன் ஒரு கனம் அமைதியை தவழ விட்டுட்டு மனோ குரலில் இசைஞானி ஆரம்பிக்க வெப்பாரு “தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னை தேடுது”... பல்லவி வரிகளுக்கு டிரம்ஸ்களின் நளினமான ஓசைகளை மட்டும் கை பிடித்து வழித்துணைக்கு வரவழைத்து மீண்டும் சின்ன அமைதியை கொடுத்து வயலின் ஆர்ப்பரிப்பை இடையிசையின் துவக்கமாக கொடுத்திருப்பாரு.
“டொட்டட்ட டொட்ட டொட்ட”னு அந்த ஒற்றை வயலினின் பேரின்பத்தை வயலின் மேதை திரு. வி.எஸ். நரசிம்மன் சாரின் கைகளினால் இசைக்க விட்டு நம்மை வேற்று உலகிற்கு அழைத்து கூட்டி செல்ல வைத்திருப்பார். அப்படியே பேரின்பத்தில் கண்ணை மூடி பரவசத்தில திளைக்கும் போது வயலினின் முடிவில் டிரம்ஸ்களை அதிர விட்டு அப்படியே மீண்டு வர செய்து பேரின்ப மயக்கத்தை சிற்றின்ப துள்ளலா கொடுத்திருப்பாரு... இந்த குறிப்பிட்ட இசை பரிமாற்றங்களில் நமக்கு கர்னாடக சாஸ்திரீய சங்கீதத்தில் இருந்து மேற்கத்திய சங்கீதத்துக்கு பயணப் பட வெச்சிட்டு திரும்ப சரணத்தில் “தேவ லோக தேரில் இவள் பாரிஜாத பூவா” அப்படீன்னு கர்னாட சங்கீதத்தில் திளைக்க வெப்பாரு.
சரணம் முழுக்க தபெலாக்களின் துள்ளல்கள் மனோ குரலுடன் துணைத் தோழனாக பயணப்படும். சரணம் முடிஞ்சி பல்லவி ஆரம்பிக்கும் போது ஓட்ட பந்தயத்தில் முதலில் ஓடும் வீரர் தன் கையில் இருக்கும் குச்சியை அடுத்த வீரருக்கு கொடுப்பது போல தபெலா அப்படியே தன்னுடைய ஆளுமையை டிரம்ஸின் கையில் கொடுத்து விட்டு ஒதுங்கி கொள்ளும். ரெண்டாவது இடையிசையை டிரம்பட் வடிவில் வெஸ்டர்ன் ஃப்ளேவரில் ஆரம்பித்திருப்பார்... அப்படியே இடையில வயலினையும் ஜோடி சேர்த்து ஒரு அதகளத்தை நடத்தி இருப்பாரு. ரெண்டாவது சரணத்தில தபெலாக்களை உச்ச பட்ச பரவசத்தில ஆட வெச்சிருப்பாரு.
படத்தில பார்க்கும் போது நடிகர்கள் ஸ்ரீகாந்த், மலேசியா வாசுதேவன், டி.எஸ்.ராகவேந்தர் என மூன்று நடிகர்களும் மூன்று நடன மங்கையருடன் ஜோடி போட்டு ஆடுவது போல அமைந்திருக்கும். ஆனா குரல் மனோ சார் ஒருவருடையதாகவே இருக்கும். அந்த காட்சி அமைப்பில் பின்னணி இசையுடன் மனோ சாரின் குரலில் அவை அவ்வளவு தத்ரூபமான சூழலையே ஏற்படுத்தி செல்லும். பாடலுடன் காட்சி அமைப்பில் மூவர் ஜோடிகளின் நளினமான துள்ளல்களுக்கு இடையே நடிகர் கார்த்திக்கின் ஆச்சர்யம் கூடிய பரிதாபத்தை இசை உணர்த்தி செல்வதை நாமும் உணர முடியும்.
எத்தனை எத்தனை பாடல்கள் மனோ குரலில் இசைஞானியால் பிரசவிக்க பட்டிருந்தாலும் இது போன்ற பாடல்கள் என்றும் என்றென்றும் கேட்டு கேட்டு சலிக்காமல் இன்புற்றிருக்க வைத்து மனதை பரவச படுத்தி விட்டு செல்வதில் யாதொரு குறையும் வைத்திருக்க மாட்டார் அந்த இசைக்கடவுள்.... மனோவில் குரலில் அத்தனை இசை ரசிக பிரியர்களுக்கும் இந்த பாடல் ஒரு இன்பத்தில் திளைக்க செய்யும் ஆல்டைம் பேவரைட் என்றால் அது மிகையாகாது... 🌺❤️🙏
May be an image of 2 people, people smiling and dais
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...