Monday, October 23, 2023

அடுத்தவரை மகிழ்விப்போம்.

 உள்ளே இருப்பதை கொட்டி விடுவது நல்லது. உள்ளே பூட்டி வைத்து, அது புழுங்கி அழுகுவதை விட வெளியே இரைத்து விடுவது நல்லது.

தானியம் நல்லதா ? கெட்டதா ? பூச்சி இருக்கிறதா ? இல்லையா? என்று தெரிந்து கொள்ளலாம். பூச்சி இருப்பின் அகற்றிவிட்டு, தானியத்தை பக்குவமாக உபயோகப்படுத்தலாம்.
.
பிரச்சனைகள் வெளியில் இருந்து வர வேண்டிய அவசியம் இல்லை. பல நேரங்களில் அவை நம் உள்ளுக்குள்ளேயே உருவாக்கப்படுகின்றன.
உங்கள் தவறுகளை நீங்களே ஏற்றுக்
கொள்ளும்.போது உங்கள் கௌரவத்தை இழக்காமல் இருக்கலாம்.
மனதில் எதை பதிய வைக்கின்றோமோ அப்படியே உடல் செயல்படும். பிரபஞ்சமும் அப்படியே இயங்கும். நல்லவற்றையே சிந்திப்போம்.
இருந்தும் இறந்தும் பிறர் நலன் பேணும் தென்னை போல் நம் எண்ணங்களாலும் செயல்களாலும் என்றும் அடுத்தவரை மகிழ்விப்போம்.
மன நிறைவோடு கூடிய மகிழ்ச்சியும், தன்னடக்கமும் எல்லா வகையான நோய்களையும் குணமாக்கும் சிறந்த மருந்துகள்.
நீங்கள் நன்றாக இருக்கிறீர்களோ இல்லையோ, மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திப் பாருங்கள். நீங்கள் நிச்சயம் நன்றாக
இருப்பீர்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...