பணி ஓய்வு பெற்ற பின்பு எங்கேனும்
ஒரு குக்கிராமம்.
வாசலில் திண்ணை..திண்ணையை
தாண்டி ஒரு வேப்பமரம்..உள்ளே போனால் ஒரு ரேழி..அதை தாண்டிய
பின்னர் கம்பிபோட்ட ஒரு முற்றம்
தாழ்வாரம்..தாழ்வாரத்தின்
பக்கவாட்டில் ஒரே ஓர் அறை..
அதை தாண்டி பூஜை அறை..அதை
ஒட்டி சமையலறை..
பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்.
கிணறு அவசியம்.அதனருகில்
துவைக்கும் கல்.ஏழெட்டு தென்னை
பூச்செடிகள்,பவழமல்லிமரம்,மாமரம்
பலாமரம்,வாழைமரம்,கொஞ்சம்
பாகற்க்காய் கொடி,கீரைகள் இப்படி..
ஒரிரு பசுமாடுகள் இருந்தால்
அற்புதம்.
குக்கிராமத்துக்கு அருகில் ஒரு பத்து
பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில்
ஒருாசிறு நகரம்(டவுன்)இருக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை டவுனுக்குப் போய்
ஏதாவது அவசிய தேவை இருந்தால்
வாங்கலாம்.
காலை எழுந்து பல் விளக்கியதும்
நீராகரம்,அதன்பின் தியானம்
உடற்பயிற்சி,பின் டீ,செய்தித்தாள்
அதை ஒருவரி விடாம படிக்கவேண்டும்.
அப்புறம் பழைய சோறு,தொட்டுக்
கொள்ள வடுமாங்காய்,மோர்மிளகாய்
அப்புறம் தோட்டத்தில் கொஞ்சநேரம்
வேலை.
அதன் பின்னால் குளியல்,பூஜை
முடிந்ததும் ஊரிலுள்ள ஈஸ்வரன்
கோவிலுக்கோ,பெருமாள்
கோவிலுக்கோ செல்லுதல்,வழிபாடு
முடித்துவிட்டு வந்தால் பதினோரு
மணிக்கு சாப்பாடு.
மனைவியும் free bird..என்னபிரியமோ
அதை செய்ய full freedom.
அதன் பின்னால் வாசல் திண்ணையில்
ஒத்தவயதுடைய,அக்கம் பக்கத்து நம்
வயதை ஒத்த நண்பர்களுடன்
அரட்டை,சிறிய பேட்டரி ரேடியோவில்
செய்தி கேட்டுக்கொண்டே விமர்சனம்.
சரியான செட்டாக நாலைந்து பேர் சேர்ந்தால்,கேரம்போர்டு,காசுவைக்காமல் ரம்மி!
மதியம் இரண்டுமணிநேரம் தூக்கம்.
மாலை ஒரு காபி..கொஞ்சம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் வேலை.
இரவு எளிய டிபன் நாலு இட்லி
அல்லது இரண்டு சப்பாத்தி
கொஞ்சம் பால்.
ராத்திரி திண்ணையில் பாய்
விரித்துக்கொண்டு,அக்கம்பக்கம்
தோஸ்த்துக்களுடன்,இருட்டில்
பேசிக்கொண்டே படுக்கை.தூக்கம்
வரும்போது தூங்கிப் போதல்..
செல்போன் இல்லை,கணினி இல்லை
டிவி இல்லை,பேஸ்புக் இல்லை
வாட்ஸஅப் இல்லை,எதுவுமே இல்லை.
உடலில் நோயுமில்லை..மனதில்
கவலையுமில்லை..வாய்க்குமா??
நண்பரின் ஆசையைப்போல்
பெண்களான எங்களுக்கும்
இருக்கிறது!
கடலளவு ஆசை....!!!!!!
கிடைக்குமா??
No comments:
Post a Comment