*இளைஞரணித் தலைவரின் தூண்டுதலால், தேசவிரோதச் செயல்களில் ஈடுபடும் உபிக்கள்..*.
சென்னையில் கிரிக்கெட்டைக் காரணம் காட்டி செய்யப்படும் ஈனத்தனமான தேசவிரோத அரசியலானது ஒவ்வொரு தேசபக்தனின் மனதையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்குகிறது.
நரேந்திர மோடி என்பவர் வேறு..
மோடி இன்று இருப்பார்.
நாளை வேறொருவர் வருவார்.
அடுத்து மற்றுமொருவர் வரலாம்.
ஆனால் இந்த தேசம் நமதல்லவா?
அந்தக்கொடி நமது அடையாளம் இல்லையா?
உனக்கு மோடி மேல் வெறுப்பு இருந்தால் அதை அவர் மீது காட்டு. பாஜக மேல் விரோதம் இருந்தால் அவர்களிடம் காட்டு அதை விட்டு விட்டு *பாகிஸ்தானை ஆதரிப்போம் என கிளம்பியிருப்பது எப்படி இருக்கிறது தெரியுமா?*
*நான் என் அப்பாவிடம் கோபிச்சுட்டு பக்கத்து வீட்டுக்காரனை "அப்பா" ன்னு கூப்பிடற மாதிரி இருக்குது.*
இது இந்திய மண்ணில் வாழும் ஒவ்வொரு தேசபக்தன் மனதையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
திமுக தனது சவப்பெட்டிக்கான ஆணியை தானே அடித்துக்கொண்டிருக்கிறது. என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த தேசத்தில் ஒரு மாநிலத்தை ஆளுகின்ற ஒருகட்சி *பாகிஸ்தான் சீருடையை அணியவே அனுமதித்திருக்கக் கூடாது..* ஆனால் இங்கே நடந்தது என்ன?
அணியச் சொல்லி தூண்டிவிட்டதே ஒரு அமைச்சர்தானே?
சேப்பாக்கம் மைதானத்துக்குள் *தேசியக்கொடியை* எடுத்துச் சென்றவர்களிடம் அதைப்பறித்துக் *குப்பைத் தொட்டியில் எறிந்திருக்கிறார் ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர்.*
இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது இந்த விடியா அரசு.
இது இவர்களின் இமாலயத் தவறு.
யார் கொடுத்தது இப்படி ஒரு தைரியம்?
அந்தப் போலீஸ் அதிகாரிக்கு?
இந்நேரம் அவரைத் தேசதுரோக வழக்கில் கைது செய்து , துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?
விசாரணை வளையத்துக்குள்
கொண்டு வந்திருக்க வேண்டாமா,? குறைந்தபட்சம் விளக்கம் கேட்டாவது நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டாமா,?
இது மாபெரும் வரலாற்றுத் தவறு .
இதை எந்த தேசபக்தனாலும்
அவ்வளவு எளிதில் கடந்து செல்லமுடியாது.
எத்தனை ஆயிரம் தமிழக ராணுவ வீரர்கள் காஷ்மீரில் பலியானர்கள்?, காரணம் யார்?
இதே பாகிஸ்தான் தானே?
*மேஜர் சரவணன்* முதல் எத்தனை
பேரை பலிகொடுத்தோம், ?
ஆக்கிரமிப்பு காஷ்மிரில் ரத்தம் சொட்ட சொட்ட சென்னையின் *அபிநந்தன்* எப்படியெல்லாம் போராடினார்?
காரணம் யார்?
இதே பாகிஸ்தான் தானே?
எல்லையில் செத்த ராணுவவீரனின் குடும்பம் என்ன மனோநிலையில் இருக்கும், அல்லும் பகலும் காக்கும் ராணுவத்தார் மனநிலை,
தமிழகம் முழுக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளை கண்காணிக்கும் உளவுபடையினர் மனநிலை,
எப்படி இருக்கும்…?
அரசியல் செய்ய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், நமக்குள் அடித்து கொள்ளலாம், நமக்குள் சாடலாம், வாதாடலாம். ஆனால் அதற்காக *நம் நாட்டின் அரசியலுக்காக தீரா எதிரியை ஆதரிப்பது மாபெரும் ஆபத்து.*
இதற்காகவா அவ்வளவு பாடுபட்டு .
லட்சக்கணக்கில் உயிர்களை இழந்து சுதந்திரம் வாங்கினோம்?
இந்நாட்டில் எங்கும் சுதந்திர கொடி கம்பீரமாய் பறக்க வேண்டும்
என்பதற்காகத்தானே?
அப்படிப்பட்ட கொடி ,
கேவலம் ஒரு விளையாட்டுக்காக
ஒரு அரங்கத்தில் பறக்கவிட கூடாது என்றால் அந்த மண்ணாங்கட்டி விளையாட்டே நமக்கு அவசியமில்லையே
இந்த அவலம் எந்த நாட்டிலும் இருக்காது
*ஒரு அரசாங்கம் தனது தேசியக்கொடியை தன் நாட்டு விளையாட்டு அரங்கில் பறக்கவிடக் கூடாது எனத் தடை விதிக்கிறதென்றால்...*
*இதே விடக் கேவலம் வேறு ஏதேனும் இருக்கமுடியுமா?*
தேசியக்கொடி இங்கே பறக்க கூடாது
என சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை!
தேசியகொடி விவகாரத்தில் கடுமைகாட்டும் என எதிர்பார்க்கபட்ட டெல்லி பீடமும் அமைதி காக்கிறது.
தமிழக ராஜ்பவனும் அமைதி
எனும் நிலையில்,
கொடிகாத்த குமரன் பிறந்த மாகாணத்தில் தாயின் மணிக்கொடி பாரீர் என
எம் பாரதி பாடிய அந்த கடற்கரையில்
எம் தேசகொடிக்கு இடமில்லை ..
அந்நியர் ஆடிபட உரிமை உண்டு..
என்பது ரத்தம் கொதிக்கும் செய்தி
ஆப்கானியர், துருக்கியர், பிரிட்டிசார்
என யார்யாரோ ஆடிந் தோற்றுவிட்ட சென்னையில் இப்போது சில கருப்பு சக்திகள் ஆடுகின்றன, அவற்றுக்கான காலம் முடியும்வரை ஆடட்டும்
இந்திய ஆடையை பாகிஸ்தானில்
ஒருவன் அணிந்து நிற்பானா?
ஏன் ஆப்கானிஸ்தானில் ?
வங்கத்தில்தான் காணமுடியுமா?
அவன் அவன்நாட்டுக்கு அவ்வளவு விசுவாசமாக இருக்கின்றான், அங்கே விளையாட்டில் கூட அரசியல் இல்லை
இதெல்லாம் சரிசெய்யப்படாவிட்டால் , உடனே களையப்படாவிட்டால் எதிர்காலத்தில் இன்னுமொரு
பெரும் குழப்பம் வரும்.
இதனை தடுக்க தவறிய ..
இல்லை இல்லை செய்யத் தூண்டிய
விடியாத் திமுக அரசுமேல் நாடெங்கும்
ஒரு அதிருப்தி நிலவுகின்றது,
இனி இண்டியா கூட்டணியில் அவர்களுக்கு இடம் கிடைப்பது சிரமம்,
*சனாதானம் போலவே மிகவும் பலம் வாய்ந்தது தேசபக்தியும், பாகிஸ்தான் எதிர்ப்பும்..*
*வந்தேமாதரம்!*
*ஜெய்ஹிந்த்!
No comments:
Post a Comment