அந்த ஞானி சொன்னார் நான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பிறகு ,ஒரு ஊரில் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன்.
அப்போது அவ்வீட்டிலிருந்த 5 வயது குழந்தையொன்று வீட்டிலிருந்த விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தது.
பாப்பா இந்த விளக்கில் வெளிச்சம் இருக்கிறதே அது எ
ங்கிருந்து வந்தது எனத் தெரியுமா என கேட்டேன்.
அந்த குழந்தை சட்டென விளக்கை ஊதி அணைத்து விட்டு,
'தாத்தா ! இப்போ இந்த வெளிச்சம் எங்கே போச்சோ,
அங்கிருந்துதான் அந்த வெளிச்சம் வந்தது' என பதில் சொன்னது.
ஆஹா!!....
ஞானம் எனக்கு மட்டும் சொந்தம் என கர்வம் கொண்டிருந்தேன்.
அதை தகர்த்த அந்த குழந்தைதான் என் மூன்றாவது குரு என்றார்.
எனவே குரு என்பவர் ஒரு நபர் அல்ல குரு என்பது ஒரு தன்மை இருளை அகற்றும் மின்னல் கீற்று..
அஞ்ஞானம் போக்கும் அறிவு...!
குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறைகள் எல்லாம் செய்ய முடியாது..!
அப்படி வரையறுப்பது சரியான ஆன்மீக நெறி முறையும் அல்ல.
No comments:
Post a Comment