Thursday, October 26, 2023

வெங்கட் பிரபு .

 திரைத்துரையில் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற கூற்று மிகவும் பொருத்தமான அடிக்கடி நடக்ககூடிய ஒன்றுதான். அமெரிக்காவில் படித்து கொண்டு இருந்த வெங்கட் பிரபு இந்தியாவிற்கு வந்தபோது நினைத்தது சிறந்த பின்னணி பாடகர் ஆக வேண்டும் என்பதுதான். காரணம் இவருடைய தந்தை கங்கை அமரன் , பெரியப்பா இளையராஜா, அண்ணன் தம்பி ( கார்த்திக் ராஜ , யுவன் சங்கர் ராஜா ) ஆகியோர் அனைவரும் அந்த களத்தில் இருந்ததுதான். மேலும் இவரது சிறுவயது நண்பர் எஸ் பி பி சரண். இருந்தும் இவர் காலபோக்கில் நடிகராகி, இயக்குநராகி விட்டார்

கங்கை அமரின் பேச்சை நீங்கள் கவனித்திருக்கலாம், யாரையும் காயபடுத்தாத நகைச்சுவை பேச்சாக அது இருக்கும். இளையராஜா எதையும் மிக சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அவருக்கு நேர் மாறாக எதையும் இலகுவாக, ஜாலியாக செய்ய எண்ணுபவர் அவர் அவரைப்போலவே அவரது மகன் வெங்கட் பிரபு, இளைய மகன் பிரேம்ஜி இருவரும் நகைச்சுவை உணர்வு தூக்கலாக கொண்டவர்கள்.
முதல் படமான சென்னை 600 028 இதற்கு மிகப்பெரிய சாட்சி. இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், ரசிக்கத்தக்க வகையில் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். எதையும் சீரியஸ் ஆக சொல்லாமல், போகிற போக்கில் சொல்கிற பாணி இவரது நகைச்சுவை உணர்வால் தோன்றியிருக்க வேண்டும். படம் பார்க்கும் 150 நிமிடங்களும் சிரித்து கொண்டே இருக்கலாம். சரி இதில் சமூக கருத்து ? அதைச்சொல்ல பலர் இருக்கின்றனர் நான் சிரிக்க வைக்கிறேன் என்பது போல படு யதார்த்தம்
ஜெய், விஜயலட்சுமி , மிர்ச்சி சிவா,விஜய் வசந்த்,பிரேம்ஜி , நிதின் சத்யா, அரவிந்த் விராஜ் ஆகியோர் பரவலாக வெளியில் தெரிய ஆரம்பித்தனர் . ஒருசிலர் முன்பே அறிமுகமாயிருந்தாலும், பெரும்பான்மையோர் தெரிந்துகொள்ளும் ஒரு களம் அவர்களுக்கு அமைந்தது.
உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே எழும் உரசல்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால் என்று போகும் கதை இன்றைய இளைஞர்களின் போக்கை படம் பிடித்து காட்டுவதாக அமையும். பால் டு பால் சிரிப்புதான்.
அடுத்தபடம் சரோஜா ஒரு த்ரில்லர் கதையை, காமெடி ஜானரில் சொல்லி இருப்பார். இதில் எஸ் பி பி சரண் நடித்திருந்தார். கிரிக்கெட் மேட்சை நேரில் பார்க்க போகும் நண்பர்கள் பிரச்சனையில் மாட்டி கொள்கிறார்கள் பிறகு அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது கதை.
கோவா – நான்கு இளைஞர்கள் சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கோவில் சொத்துகளை திருடி கொண்டு கோவா செல்கின்றனர். அங்கு வரும் அயல்நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் வெளி நாடு சென்றுவிடமுடியும் என்ற கனவில். பிறகு நடந்தது என்ன என்பது மீதம் . வழக்கம்போல நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.
மங்காத்தா – அஜித்தை வைத்து எடுத்து மேலும் வலுவான திரைக்கதை , கிரிக்கெட் சூதாட்டம் அதன் பின்னணி பற்றிய படம் நகைச்சுவை இருந்தாலும் ஆக்சன் படத்துக்கு உரிய அனைத்தும் இருக்கும். இசை யுவன் சங்கர் ராஜா பாடல்கள் வெகு நாள் வரை ஒலித்தது. அஜிதிற்காக அசத்தலான காட்சிகள் உண்டு. திரிஷா, அஞ்சலி ஜெயபிரகாஷ் பலரும் வந்து படம் பெரிய ஹிட்
பிரியாணி – இது திரைக்கதை சொதப்பிய படம். கார்த்தி, பிரேம்ஜி நகைச்சுவை பேசப்படும்படி இருக்கும். மறுபடி பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது எனது கருத்து.
மாசு என்கிற மாசிலாமணி , பேய் பட சீசனில் வந்ததால் படம் முழுக்க ஏரளாமான பேய் , செத்தவர்களுக்கும் பிரச்சனை இருக்கும் காதல் இருக்கும் பாசம் இருக்கும் அதையெல்லாம் நிறைவேற்றி தந்து அவர்களை தங்கள் திட்டத்திற்கு பயன்படுத்தி கொள்ள நினைக்கும் நாயகனின் கதை. சீரியஸ் ஆன கதை இல்லையில்லை என்பதாலேயே இதன் மீதான மதிப்பு குறைந்து போனது.
சென்னை 600028 இரண்டாவது இன்னிங்க்ஸ் முதல்படம் வெளியாகி ஏறக்குறைய பத்து வருடங்கள் கழித்து படம் வந்தது போதும் அதில் உள்ள கதாபத்திரங்களை எண்பது சதவிகிதம் இதிலும் இடம் பெற செய்து உண்மையான இரண்டாம் இன்னிங்க்ஸ் கொடுத்திருப்பார்.
இதில் சற்று சீரியஸ் ஆக ஜெய்யின் நிச்சயித்த திருமணம் ஒரு விடியோவால் தடைபட்டு இருக்கும் அதை எப்படி சரி செய்தார்கள் என்பது கதை. சிரிப்புக்கும் பஞ்சம் இல்லாமல், கதையிலும் கோட்டை விடமால் செய்துஇருப்பார். படம் கவனத்தை ஈர்த்தது எனலாம்
மாநாடு படம் சிம்புவுக்கு பிரேக் கொடுத்த ஒரு படம் என்று கூறலாம் டைம் லூப் கதையை தமிழில் முதலில் சொன்ன படம் சற்று பிசகினாலும் படம் போர் அடித்து விடும் என்கின்ற நிலையில் அதை அவ்வாறு ஆகாமல் சிறப்பாக செய்திருந்தார் எஸ் ஜே சூர்யா சிம்பு ஆகியோர் படத்திற்கு பெரிய பலமாக இருந்தது படம் வெற்றி படமாக மாறியது
இவர் தொலைக்காட்சியில் வரும் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படங்களில் ஒன்றான லோகம் என்ற படத்தை இயக்கியிருந்தார் அதேபோல லைவ் டெலிகாஸ்ட் என்ற மர்ம தொடரிலும் அதுபோல ஒரு கதையை செய்திருந்தார்
இவர் சென்னை 28 இல் சொப்பன சுந்தரி பாடலை இயற்றியுள்ளார்.
அஜித், எஸ் பி பி சரண் ஆகியோர்சிறந்த நண்பர்கள் என்பதால் அவர்கள் சார்ந்த படத்தில் நடிகராகவும் வந்திருப்பார்.
விஜயின் 68வது படத்தை இயக்க ஒப்பந்தமாக இருக்கிறார் என்பது சமீபத்திய தகவல்
எதையும் இலகுவாக எடுத்து கொள்ளும் போக்கால் கலகலப்புக்கு குறைவில்லாத கதைகள், சிறந்த பொழுதுபோக்குக்கு இவரது படங்களை கண்ணை மூடி கொண்டு சிபாரிசு செய்யலாம்.
வாழ்த்துகள்.
May be an image of 1 person, beard and wrist watch
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...