#போனாலும் ...
#அழித்தாலும் ..
அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்ததில் இருந்தே
வரிசையாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
லோக்சபா தேர்தல் தோல்வி , இடைத்தேர்தல் தோல்விகள், சட்டசபை தோல்வி, உள்ளாட்சி, நகராட்சி தோல்வி என்று வரிசையாக தோல்விகளை சந்தித்தது.
பசும்பொன்னிற்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு திட்டமிட்டு வருகிறார்.
தென் மாவட்டத்தில் அவர் எதிர்பார்க்கும் ஆதரவு வரவில்லை.
அதனால்தான் மதுரையில் அவர் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை.
அதனால்தான் அங்கே புளிசாதம் மீந்து போனது.
அதோடு சங்கரன் கோவிலில் அவர் எதிர்பார்த்த கூட்டம் இல்லை.
வந்த கூட்டம் கூட பாதியில் கலைந்து சென்றுவிட்டது.
அதனால் பசும்பொன்னிற்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு திட்டமிட்டு வருகிறார்.
அவர் அங்கே செல்லலாம். ஆனால் அவருக்கு அங்கே எதிர்ப்பு வரலாம்.
அவர் மீது முக்குலத்தோர் கோபத்தில் உள்ளனர்.
முக்குலத்தோர் கடுமையான கோபம் கொண்டு உள்ளனர்.
சசிகலாவிற்கு துரோகம் செய்தார்.
டிடிவி தினகரனுக்கு துரோகம் செய்தார்.
கூட இருந்து ஆட்சி செய்ய உதவியாக இருந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு துரோகம் செய்தார்.
10.5 சதவிகிதத்தை பிரித்து வன்னியர்களுக்கு கொடுத்தார்.
மீதம் உள்ள மொத்த 10 சதவிகிதமும் தென் மண்டலத்திற்கு என்று சுருங்கிவிட்டது.
இதனால் தென் மண்டலத்தில் கடுமையான கோபத்தில் உள்ளனர்.
இடஒதுக்கீட்டை காலி செய்துவிட்டார் என்று கோபத்தில் உள்ளனர்.
அதிமுக மீதே கோபத்தில் உள்ளனர்.
ஒரு காலத்தில் முக்குலத்தோர் காங்கிரசை ஆதரித்தனர்.
பின்னர் திமுகவை ஆதரித்தனர்.
அதன்பின் அதிமுகவை ஆதரித்தனர்.
சசிகலா வருகை காரணமாக அதிமுக பக்கம் வாக்குகள் சென்றது.
ஜெயலலிதா காலத்தில் மொத்தமாக முக்குலத்தோர் ஜெயலலிதா பக்கம் இருந்தனர். இப்போது நிலைமை அப்படியில்லை.
எடப்பாடி செய்த துரோகம் காரணமாக தென் மண்டலத்தில் அவர் வெற்றியே பெற முடியாது.
7 முக்கியமான தொகுதிகள் உள்ளன.
இங்கே முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் உள்ளன.
திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர் என்று 7 தொகுதிகள் முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதிகள்.
இங்கே எல்லாம் எடப்பாடிக்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்காது. அங்கே எல்லாம் கிளீன்
போல்ட் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
7- 9 லோக்சபா தொகுதிகளில் உள்ள 39 சட்டசபை தொகுதிகளில் 14 இடத்தில்தான் அதிமுக வென்றுள்ளது.
இங்கே தினகரன் மட்டும் 4 லட்சம் வாக்குகள் வென்றுள்ளார்.
அப்படி எல்லாம் இருக்கும் போது..
இப்போது
ஓ பன்னீர்செல்வம் இல்லாத போது..
டிடிவி தினகரன் வாக்கை பிரிக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு வாக்குகள் கிடைக்காது.
எவ்வளவு குட்டிக்கரணம் போட்டாலும்..
எவ்வளவு முறை குருபூஜைக்கு போனாலும் வாக்குகள் கிடைக்காது.
எடப்பாடி ஸ்டாலினுக்கு எதிராக நிற்கிறார் என்று சொல்ல முடியாது.
அவருக்கு சிறுபான்மையினர் வாக்குகள் சென்றுவிடும் என்றும் சொல்ல முடியாது.
இஸ்லாமியர்களை விடுதலை செய்ய ஏற்கனவே அரசு பரிந்துரை செய்துவிட்டது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆளுநர்தான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
அப்படி இருக்க எடப்பாடி இதில் ஸ்டாலினை எப்படி எதிர்க்க முடியும்.
அவர் ஆளுநரைத்தானே எதிர்க்க முடியும்? அவர் ஆளுநரிடம்தானே கேட்க முடியும்.
ஆனால் அங்கே கேட்கவில்லையே.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போருக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எதுவும் சொல்லவில்லையே. அவர் சொல்லி இருக்கலாமே.
அவர் ஏன் எதுவும் பேசவில்லை.
எடப்பாடியிடம் நான் பார்த்த ஒரே மாற்றம் அவர் நெற்றியில் விபூதி இல்லை. எப்போதும் விபூதியுடன் வருவார். அது இப்போது இல்லை.
அந்த விபூதியை அழித்துவிட்டு வருகிறார். அவரிடம் பார்த்த ஒரே மாறுதல் இதுதான்,
சிறுபான்மையினரை அரவணைக்க வேண்டும். அவர்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று இப்படி செய்கிறாரோ என்று தோன்றுகிறது.
அவரின் சமீபத்திய கூட்டங்களில் எல்லாம் நான் கவனித்தேன்.
அவர் விபூதி இல்லாமல் வருகிறார். இப்படி செய்தால் சிறுபான்மையினரை இழுக்கலாம் என்று அவர் நினைக்கிறார் போல.
ஆனால் அது எல்லாம் நடக்காது.
விபூதி இருக்கோ.. இல்லையோ அவர் என்ன பேசுகிறார் என்பதே முக்கியம்.
அவர் பேசுவதை வைத்தே அவரின் அரசியல் இருக்கும்.
அவர் விபூதி வைத்துக்கொண்டு மோடியை எதிர்த்தால் கூட மக்கள் நம்புவார்கள்.
ஆனால் அவர் அதை செய்வது இல்லையே.
#பிரியன் .
No comments:
Post a Comment