Saturday, October 28, 2023

வெங்காயம்_விலையும் . #உழவனின்_கண்ணீரும் .

 

♦வெங்காயம் கிலோ 100ரூபாய்
என்று கூவும் அனைவரும் வாருங்கள்......
♦எத்தனை பேர் வந்தாலும் நபர் ஒருவருக்கு ஒரு ஏக்கர் நிலம் தரப்படும். ..
♦அதில் நீங்கள் வெங்காயம் சாகுபடி செய்து பாருங்கள்...
♦அப்போது தெரியும் உழவனின் வேதனை உங்களுக்கு .
♦உழவன் தயார் செய்யும் பொருட்கள் அனைத்தும் இடைதரகர்கள் சொல்லுவது தான் விலை.
♦கிலோ 100 ரூபாய் க்கு விற்கும் வெங்காயம் அப்படியே உழவனின் கையில் கிடைக்கும் என்று நீங்கள் நினைத்து விட்டிங்க ,...
♦அதுதான் இல்லை? நாங்கள் எங்கள் தோட்டத்தில் ஒரு கிலோ 50 ரூபாய் க்கு தான் விற்பனை செய்கிறோம்.
♦இது அனைத்து நேரத்திலும் இல்லை ..
♦ஒரு சில நாட்கள் மட்டுமே!!!
♦மீதி நாட்கள் எங்களின் நிலை ரொம்ப மோசம்.
♦இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு தொலைக்காட்சி பெட்டியில் வெங்காயம் கிலோ 100 ரூபாய் க்கு விற்றால் தான் உழவனின் கஸ்டம் என்னவென்று தெரியும் என்று, ..
♦உழவன் கொஞ்சம் மகிழ்ச்சி அடையட்டும் என்று சொன்னார்கள்,
♦ஆனால் அந்த பணம் அப்படியே உழவனின் சட்டை பையில் வந்து சேரும் என்று நினைத்து விடாதீர்கள், அது தான் இல்லை?
♦ஒரு ஏக்கர் நிலத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்ய ஆகும் செலவுகள் எவ்வளவு தெரியுமா?
♦உழவிற்கு 10000,
♦குப்பை க்கு 10000,
♦அடி உரம் 5000,
♦விதை வெங்காயம் இன்றைய விலை ஒரு கிலோ 110 .இதற்கு 66000 ரூபாய் .
♦நடவு கூலி 25 நபர் 25×300=7500 ..
♦களைகொல்லி மருந்து 3000,
♦இடையில் களை எடுக்க 20 நபர்.
♦இதற்கு 20×300=6000,
♦உரம் செலவு 10000,
♦கடைசியில் அறுவடை செலவு வெங்காயம் பிடுங்க 20 நபர் இதற்கு 20×300=6000,
♦வெங்காயத்தில் இருந்து தால் எடுப்பதற்கு 25 நபர்கள் தேவை ..
♦40kg க்கு 150ரூபாய் குடுக்க வேண்டும்.
♦இதற்கு 40×200=8000,
♦வெங்காயத்தை பற்றையில் கொண்டு சேர்க்கும் நபர் ஆண்கள் ஆறு நபர் ஒருவர் க்கு 600.600×6=3600.
♦இவற்றுடன் வேலை முடியாது ..
♦இரவு ஒரு மணி அளவில் மழை வரும் உடனே ஓட வேண்டும். அங்கு சென்று தார் பாய் போட்டு முட வேண்டும்.
♦அடுத்த நாள் வியாபாரிகள் வந்து உங்கள் வெங்காயம் கலர் இல்லை, உருட்டு இல்லை, பெரிய அளவில் இல்லை என்று சொல்லி அடி மாட்டுவிலைக்கு கேட்க ,
♦அதற்கும் சரி என்று விற்பனை செய்து விட்டு,
♦அடுத்த நாள் லாரி வருகிறது என்று வியாபாரி போன் செய்வார்,
♦நங்கள் எடை நிலையம் சென்று லாரி எம்டி எடையை போட்டு விட்டு வருவோம்.
♦வெங்காயம் மூட்டை பிடிக்க வந்த ஆட்கள் எங்களுக்கு தேனீர் போண்டா வேண்டும் என்று சொல்லி விடுவார்கள் ...
♦20 நபர்கள் இதற்கு 400, செலவு இதை தொடர்ந்து நங்கள் மீண்டும் லாரி லோடு ஏற்றிய உடன்
♦மீண்டும் எடை நிலையம் சென்று பார்த்து விட்டு எடை சிட்டு வாங்கி கொண்டு அடுத்த நாள் வியாபாரி யிடம் பணத்தை வாங்க சென்றால்,
♦ஒரு டன் எடைக்கு 30 கிலோ வை பிடித்துக்கொண்டு,
♦உதாரணமாக 8000 கிலோ என்று வைத்தது கொண்டல்=8000 டன் கணக்கில் 8×30=240 கிலோ வை அப்படியே அட்டையை போட்டு விட்டு ..
♦7760 × 20 =155200 லட்சம் ரூபாய் இந்த பணத்தை கொடுக்க இரண்டு மாதங்கள் தவணை,
♦அதற்கு மேல் இவை அனைத்தும் இந்த விலைக்கு விற்பனை நடந்தால் மட்டுமே இவ்வளவு கிடைக்கும்.
♦இதில் எங்கள் உழைப்பு, தண்ணீர் மற்றும் எங்கள் வேலை இதில் சேர்க்க வில்லை,
♦மொத்த செலவு 135500 இதில் மிச்சம் 19.700 மட்டுமே,
♦இதில் எங்கள் உழைப்பு 60 நாட்கள் ஒரு ஆண் ஒரு பெண் கூலி 60×500=30000, 300×60= 18000 இரண்டும் சேர்த்து 48'000, ..
♦மிச்சமாகும் பணம் 19 "700 மட்டுமே, இதில் எங்கள் கூலி யே 28300 ரூபாய் நஷ்டம் ...
♦இது யார்க்கு தெரியும் உழவனின் உண்மை நிலை ..
♦இது தான் எங்களின் கண்ணீர் .
♦எங்கள் மனைவிமார்களின் தாலி முதல் கொண்டு பேங்கில் வைத்து விட்டு வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏
♦தயவு செய்து.....
உழவனை குறைத்து மதிப்பிடாதீர்கள்,
♦நாங்கள் இல்லையேல்.....
நீங்கள் இல்லை.
May be an image of 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...