ஸ்ரீ பாலமுருகன் பிலிம்ஸ் அளிக்கும்
N. S. ராம்தாஸ் இயக்கத்தில் "தாழம்பூ"
வெற்றித்திரைப்படம் இதே நன்நாளில்
23-10-65 ல்வெளிவந்து 59ஆம்ஆண்டில்
அடியெடுத்து வைக்கிறது. மர்மம் நிறைந்தமாளிகை குடும்பகதையை
பட்டம் படித்த நாயகன் துரையாக மக்கள்திலகம் எம்ஜிஆர், வட்டவட்ட பாத்திகட்டி என்ற பாடலுடன் நாயகி
கே. ஆர்.விஜயாவும் அறிமுகமாகும் விதம் அருமை.மணிமாலா, அசோகன்
நம்பியார், நாகேஷ், மனோரமா, குமரி ராதா, எம். ஆர். ராதா, A. R. ராம்சிங், திருப்பதி சாமி மற்றும் பலர்நடித்த
படத்தின் இசையை திரைஇசைத் திலகம் கே. வி. மகாதேவன் அமுதென
அமைத்திருந்தார்.துரை,கமலியின் நுன்னிழை காதலிடையே நாகேஷின் கோழி காமடி கலகலக்க மர்மமும, மயங்க வைக்கும் பாடல்களால் தாழம்பூ மனம் கமகமக்கும். "தாழம்பூவின் நறுமனத்தில் நல்ல தரமிருக்கும்" "ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு" தூவானம் இது தூவானம் இது தூவானம் "என
முத்தான மூன்று பாடல்களை கவியரசு
கண்ணதாசனும்,எங்கே போய்விடும்
காலம் என தன்னம்பிக்கை வித்தாக
கவிஞர் வாலியும்,வட்ட வட்ட பாத்தி
கட்டி வண்ண வண்ண சேலைகட்டி
பாடல் தந்த ஆலங்குடி சோமு, பங்குனி
மாதத்தில் ஒர் நிலவை அழைத்த திருச்சி தியாகராஜன் பாடலும் ஜோர் ஜோர் என என்றும் மணக்கும் தாழம்பூ
படத்தில் வாத்தியார் அழகு முகமே சாட்சியாக காட்சியாக ஒரு ஸ்டில்.
No comments:
Post a Comment