தேர்தல் மட்டும்தான் இப்போது எடப்பாடி பழனிசாமி குரு பூஜைக்கு செல்ல காரணம்.
அவர்கள் இதை எல்லாம் நம்பி வாக்கு அளிக்க மாட்டார்கள்.
அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
இதை எல்லாம் நம்பி வாக்கு கொடுக்க மாட்டோம்.
அவர் நம் முதுகில் குத்திவிட்டார் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
அதனால் எடப்பாடிக்கு இதனால் எல்லாம் வாக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அங்கே அவருக்கு ஒரு சீட் கூட கிடைக்காது.
நேற்று பெரிய பிரச்சனை நடந்திருக்கும். குருபூஜையில் எடப்பாடியால் மோதல் வந்திருக்கும்.
ஆனால் தேவரை பார்க்க வந்துள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது யாரும் தாக்கவில்லை.
மரியாதைக்காக எடப்பாடியை விட்டு வைத்தனர்.
அதிமுக மீண்டும் சேர வேண்டும், தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை இணைக்க வேண்டும். அப்போதுதான் சமாதானம் செய்ய முடியும்.
பிரச்சனை மேல் பிரச்சனை:
ஆனால் அதை பற்றி எல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசுவது இல்லை.
அவரின் நடவடிக்கைக்கு சரியான விலை கொடுக்க போகிறார்.
அவரின் செயலுக்கு கண்டிப்பாக சிக்கல் வரும். அவர் முக்குலத்தோரை காயப்படுத்திவிட்டார்.
அதற்கு பதில் தர வேண்டும். இல்லையென்றால் 2024ல் அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இதே போக்கை அவர் கடைபிடித்தால் முக்குலத்தோர் அவருக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.
அவரை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
எடப்பாடிக்கு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
அவரை முடக்கி போடும் வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடி முக்குலத்தோரை பழிவாங்கிவிட்டார்.
சசிகலா யாரு என்று கேட்டவர் எடப்பாடி. அவரை எப்படி முக்குலத்தோர் மன்னிப்பார்கள். சொல்லுங்கள்.
அவரை பழிவாங்கியதை விடுங்கள்.. ஓ பன்னீர்செல்வத்தை பழிவாங்கி உள்ளார். டிடிவி தினகரனை பழிவாங்கி உள்ளார்.
முக்குலத்தோரை மொத்தமாக அவர் பழிவாங்கி உள்ளார்.
அவரை எப்படி முக்குலத்தோர் பிரிவினர் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்.
இது போக முக்குலத்தோர் இடஒதுக்கீட்டீல் பிரச்சனை செய்துள்ளீர்கள்.
அவர் மனசாட்சி உறுத்த வேண்டும். அந்த மக்களுக்கு அவர் துரோகம் செய்துள்ளார்.
அந்த துரோகத்தை செய்துவிட்டு அவர் எப்படி குருபூஜைக்கு செல்ல முடியும்.
அவர் இப்போது இரட்டை வேடம் போட்டால் அதனால் பலன் இல்லை.
முக்குலத்தோர் எமோஷனலான மக்கள். அவர்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.
அவருடன் இருக்கும் ஆட்களுக்கும் கூட இது தெரியும்.
எடப்பாடி பழனிசாமி இதை உணர வேண்டும்,
No comments:
Post a Comment