#பிராமணர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்க நினைக்கவில்லையா? அது ஏன்?
பிராமணர்கள் எந்த காலத்திலும் உழைத்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் எல்லா ஊர் பஸ் ஸ்டாண்ட் அருகிலும் பிராமணர் நடத்தும் ஒரு சின்ன ஹோட்டல் இருக்கும். அதில் சமையல்காரர், சர்வர் என்று உழைத்தனர். இன்றும் எண்ணற்ற பிராமணர்கள் கேட்டரிங் தொழில் செய்கின்றனர். அரசாங்க வேலை வாய்ப்பு இல்லாததால் படித்து IT கம்பெனி களுக்கு போக வழி இல்லாத, வசதி இல்லாத, மேற்படிப்புக்கு போக முடியாத ஏராளமான பிராமணர்கள் தனியார் நிறுவனங்களில் உழைக்கின்றனர். இப்போதும் ஏராளமான பிராமணர்கள் அப்பளம், வடாம், மாவடு, ஊறுகாய் என்று தயார் செய்து விற்று வாழ்கின்றனர். பெட்டிக்கடை, மருந்து கடை வைத்து இருக்கும் பிராமணர்கள் உண்டு. எல்லா பிரிவு பிராமணர்களும் கோவில் அர்ச்சகர் ஆக முடியாது. எனக்கு தெரிந்து டெல்டா மாவட்டங்களில் கோவில்களுக்கு சுற்றுலா கார் வாடகைக்கு ஓட்டும் பிராமணர்கள் நிறைய பேர் உண்டு. சாதி சமய வேறுபாடு இன்றி 90 சதவீதம் உழைத்து உண்ணும் வர்க்கமே!
அது மட்டும் அல்ல
பிராமணர்கள் கனிம வளம் கடத்தல், திருட்டு, சட்ட விரோத காரியங்கள், கட்ட பஞ்சாயத்து, ரவுடித்தனம் , மோசடி வேலைகள், மறியல், சட்டம் ஒழுங்குக்கு இடையூறு போன்ற எந்த காரியங்களிலும் ஈடுபடுவது இல்லையே ஏன்?
மகளோ மகனோ வேறு சாதியில் திருமணம் செய்தால் ஒன்று ஏற்றுககொள்வார்கள் அல்லது தலை முழுகி விடுவார்கள். ஆணவ கொலை செய்ய மாட்டார்கள். ஏன்?
எந்த ஏரியாவில் வசித்தாலும் எந்த ஊரில் வசித்தாலும் அந்தந்த மக்களுக்கு எந்த தொந்தரவும் இன்றி அவர்களுடனே ஒற்றுமை யாக கலந்து வசிக்கிறார்களே ஏன்?
பாவ புண்ணியங்களுக்கு பயந்து வாழ்ந்து அடுத்த தலைமுறைகளையும் அப்படியே வளர்க்கிறார்களே ஏன்?
விரும்பியது கிடைக்கவில்லை எனில் கிடைத்ததை விரும்புவோம் என்ற மனோ நிலையில் இருக்கும் கட்டாயம் ஏன்?100 வருடங்களாக அநீதி இழைக்கப்படுகிறது. கல்வி, வேலை வாய்ப்புகள் முற்றிலும் இல்லை. சமூக நீதி என்ற பெயரில் அடுத்த வேளை சோற்றுக்கு வழி இல்லாத பிராமண மாணவ மாணவிகளுக்கு கூட "முற்பட்ட சமூகம்" என்று அரசு உதவி எதுவும் செய்வது இல்லை. பிஜேபி தவிர மற்ற எல்லா கட்சிகளும் பிராமண எதிர்ப்பு கட்சிகள்தான். திரைப்படம் மற்றும் சமூக வலை தளங்களில் கேலி, கிண்டல், வெறுப்பு என்றாலும் என்றோ ஒரு நாள் விடிவு காலம் பிறக்கும் என்று இறைவன் மேல் பாரத்தை போட்டு அமைதியுடன் இருக்கிறார்களே ஏன்?
1980இல் எம் ஜி ஆர் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்திய பின் தமிழ் நாடு அரசில் பிராமணர்களுக்கு வேலைவாய்ப்பு அறவே நின்று விட்டதே. அதற்கு பின்னும் திக கும்பல் ஆதிக்கம் ஆதிக்கம் என்று பொய் பிரச்சாரம் செய்வதை யாரும் கண்டிக்கவில்லையே ஏன்?
திமுக "பிரமுகர்" ராஜீவ் காந்தி என்ற நபர் "பிராமணர்களை 50 ஆண்டுகள் முன்பே இனஅழிப்பு செய்து இருக்க வேண்டும் " lஎன்று பதிவிட்ட போது மற்ற எல்லா சமூக மக்களும் அரசியல் கட்சிகளும் கண்டிக்க வில்லையே ஏன்?
இட ஒதுக்கீடு இல்லாத சமூகத்தினருக்கு மோடி அரசு கொண்டு வந்த EWS ஒதுக்கீட்டை பிராமணர்களுக்கான ஒதுக்கீடு என்று திரித்து தமிழ் நாட்டில் இன்னும் அமல்படுத்தவில்லை . நாடாளுமன்றத்தில் இதை ஆதரித்து ஒட்டளித்த காங்கிரஸ் மற்றும் சிபிஎம் மௌனமாக இருப்பது ஏன்?
இந்த பத்து சதவீத ஒதுக்கீட்டை முஸ்லீம் கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் உட்பட மற்ற இட ஒதுக்கீடு இல்லாத இல்லாத சமூக மக்களும் பயன் படுத்தி கொள்ளலாம் என்பதை தமிழ் நாட்டில் எல்லா ஊடகங்களும் மறைக்கின்றனவே ஏன்?
இன்னும் எவ்வளவோ. எனவே வேலை இல்லாமல் சும்மா எப்போது பார்த்தாலும் பிராமணர்களை சீண்டுவதை விட்டுவிட்டு வேறு உருப்படியான விஷயங்களை விவாதிக்கவும்...
வந்தேறி கலப்பின திராவிட மூடர்களே...
No comments:
Post a Comment