சித்ரா லக்ஷ்மணன் ஹோட்டல் அடையார் ஆனந்த பவன் அதிபரை பேட்டி எடுக்கும் காணொளி youtube இல் உள்ளது.
பிராமணர்கள் கையில் இருந்த ஹோட்டல் துறையை எப்படி நீங்கள் கைப்பற்றினீர்கள் என்று கேட்கிறார். அவர் பெரியார்தான் இதற்கு காரணம், யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று குலத்தொழிலை ஒழித்தார் என்கிறார்.
வேறு வேலையே இல்லை போலிருக்கிறது இவர்களுக்கு. பெரும் கோடீஸ்வரர்களாக ஆனபின்னர் கூட, உழைத்தோம், முன்னேறினோம் என்று தங்கள் மீது நம்பிக்கை கொண்டு பேசுகிறார்களா பாருங்கள். யாரையோ, பின்னுக்கு தள்ளி, அவர்களை ஏறி மிதித்ததால்தான் நாங்கள் முன்னேறினோம் என்று சொல்கிறாரா இவர்?
அந்த காலத்தில் நாடார்கள் பலர் மிகவும் பின்தங்கியிருந்தார்கள். உழைப்பது என்று முடிவெடுத்து, நாடார் மகமை fund உருவாக்கி, சத்திரங்கள் கட்டி, மளிகை கடை பயிற்சி கொடுத்து, தொழில் கற்றுக்கொடுத்து, முன்னேறி, முன்னேற்றினார்கள். அவர்களில் யாரும் பிராமணர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறினோம் என்று கூறுவதே இல்லை. எவ்வளவு முன்னேறினாலும் சிலரது புத்தி மாறாது.
கல்வி, மருத்துவம், உணவு மூன்றையும் இலவசமாக அல்ல, சேவையாக செய்த நாடு நம்நாடு. ஹோட்டல் கடை வைத்து நடத்துவது பிராமணர்களின் குலத்தொழிலா? எந்த சாஸ்திரத்தில் போட்டுள்ளது? உணவுப்பொருளை விற்கலாம். சமைத்த உணவை விற்கவே கூடாது. தெரியுமா இவர்களுக்கு? ஆயிரம் சாஸ்திரம் பார்க்கும் பிராமணர்கள் உணவை விற்றார்கள் என்றால் ஏன் அந்த நிலை வந்தது?
பிழைப்புக்கே வழியில்லை. வேத பாடசாலை நடத்துகிறவர்கள் நலிந்துகொண்டு போனார்கள். காரணம் யார்? நிலச்சுவான்தார்களாக இருந்த சூத்திரர்களால் அவர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை அல்லது செய்யவில்லை. அவர்களுக்கும் பயம். வைசியர்கள் உதவியும் கிடைக்கவில்லை. காரணம் வரி, கப்பல்கள் அவன் வசம். பிரிட்டிஷ்காரனை கண்டால் பயம். பிராமணர்கள் கல்வியையும், கோவிலையும் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை நலிவடைய வைக்க வேண்டும் என்பது அவன் திட்டம். இதற்கு எதிராக யார் இருந்தாலும் ஏதோ ஒரு வழக்கை போட்டு விடுகிறான் என்று அச்சம். இவர்களை பாதுகாக்க வேண்டிய க்ஷத்ரியர்கள் அவர்களிடமே வேலைக்கு போனார்கள் அல்லது துணை போனார்கள். க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் மூவருமே கைவிட்ட பின்னர் பிராமணன் என்ன செய்வான்? அதிகார பலமில்லை, பண பலமில்லை, நிலமும் இல்லை. ஒரே வழி கல்வி. அதற்கும் மெக்காலே கல்வி முறை என்று ஏதேதோ செய்ய துவங்கிவிட்டார்கள். மிச்சம் இருப்பது பசி மட்டுமே.
தங்க நெல்லிக்காய் மழை சங்கரன் அருளால் பொழிந்தது,,,அந்த காலகட்டத்தில்.............ஆனால் பிற்காலத்தில் கலியின் கொடுமையால் அவர்கள் மேல் இன்று வரை அமில மழைதான்.....
சாராயக்கடைகளை திறந்ததால், திண்ணைகளில் குடித்ததால் அவற்றை அடைத்தார்கள். பேதிக்கட்சி என்றொன்றை துவக்கி ஊரை ரணகளம் செய்தார்கள். நாத்தீக சீமை கருவேலம் வளர்ந்தது. ஆத்திக நெல்வயல்கள் நசிந்தது. வாட்டிகன் வாக்கு இங்கு வேதவாக்கானது,,,,,அக்கிரகாரங்கள் காராக்கிரங்களாக்கப்பட்டன,,,
பிறந்த ஊரை விட்டு விரட்டப்பட்டதால் பிழைக்க வழியில்லாததால், கல்வியை தவிர, கல்வி சற்று கடினமாக உணர்ந்தவர்களுக்கு சொந்தமாக சமைக்க தெரிந்திருந்ததால் சம்பாதித்தாகவேண்டும் என்ற நிலை. அவர்கள் உணவளித்து மட்டுமே சம்பாதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதிலும் நேர்மையாக சேவையாக உழைத்தான், ஓரளவு பிழைத்தான். ஹோட்டல் அதிபர்கள் என்று அவர்களில் யாருமே இல்லை. எல்லாமே சிறுசிறு ஓட்டல்கள் மெஸ்கள்தான். மாதடோக்கன் எடுத்து ஐயர் மெஸ்களில் அடைக்கலம் புகுந்த பேச்சுலர் கூட்டங்கள் லட்சங்களில்,,,மனசாட்சி இருந்தால் ஒப்புக்கொள்வார்கள்,,,,இல்லாதவர்கள் இயலாதவர்கள் பலரிடம் பணத்தில் கறாறாக இருந்ததில்லை அவர்கள்,,,பல அவர்களுடைய ஓட்டல் கடைகளில் நாம் சொல்வதுதான் கணக்கு,,,தம்மைப்போலவே மற்றவரும் ஏமாற்றமாட்டார்கள் என்ற நம்பிக்கை,,,பின் தனது கஸ்டத்தை பார்த்து தன் பிள்ளைகளாவது படித்து முன்னேறிவிடவேண்டும் என தன் ஊனையே உருக்கிக்கொண்ட பெற்றோர்கள் ஆனபின் (அர்ச்சகர்களும் இந்த பிரிவில் உள்ளனர்), தன் பிள்ளைகளை 100க்கு 100மார்க் எடுக்கவைப்பதில் தன் வாழ்வையே அர்ப்பணித்து வெளிநாடு தனியார் என திறமைக்கு மதிப்பளிக்கும் இடங்களில் சென்று சேர்த்து, தங்கள் மக்கள் தொகையையே குறைத்துக்கொண்டு எண்ணிக்கை முக்கியம் அல்ல தரம் மட்டுமே முக்கியம் என்ற வகையில் கூட்டத்தைக்காட்டி சலுகை பெற முயலாமல் நாட்டிற்கு பாரமாக பெற்றுத்தள்ளாமல் ஆனால் 0.3 சதவிகிதம் என்ற ஏளனங்களைத்தாண்டி,
இப்படியாக எல்லாரும் கைவிட்ட கூட்டத்தை பார்த்து, தாங்களே அடித்து பிடித்து முன்னேறிய ஒரு சமூகதை பார்த்து, இன்று சமுதாயத்தில் ஏற்பட்ட எல்லா அநீதிகளுக்கு இவர்களே காரணம் என்பது போல ஒரு மாயையை உண்டாக்கி, அதை பணக்காரர் முதல் பாமரர் வரை நம்ப வைத்து, அது பொய்யென்று தெரிந்த பின்னரும் அவர்களை அடக்கியே வைப்போம் என்று ஒரு சாடிஸ்ட் மனோநிலைக்கு தமிழக மக்கள் அனைவரும் தள்ளப்பட்டு குற்றஉணர்ச்சியற்று இன்றும் வதைக்கிறோம் என்பதில் எனக்கும் வெட்கமாய்த்தான் இருக்கிறது,,,,,,பாலஸ்தீனுக்கு பொங்கும் நாம் 1967 அவர்கள் நிலப்பரப்பை ஒப்புக்கொள்ளமுடியாது என்றும் 1948க்கு போங்கள் என்கிறோம்,,,, இஸ்ரேல் சரி இன்னும் பின்னோக்கி போவோம் அப்போதுதான் தெரியும் யாரை யார் விரட்டிவிட்டு நாடு பிடித்திருக்கிறார்கள் என்று,,,,அதை தவறு என்று கூறும் நாம் அரசியல் சாசனத்தில் இல்லாத 2000 3000 ஆண்டுக்கு முன் இருந்த மனுவைக் காட்டி இன்றுள்ள அவர்களை கொட்டி கொட்டி கொடுமைப்படுத்துவது எந்த முறையில் சரி,,,, பலரது எழுத்துக்களை ஒருங்கிணைத்தது(நானும் சில வரிகள்)
No comments:
Post a Comment