ரெண்டு நாளைக்கு முன்னாடி ஏ டு பி ஆனந்தபவன் ஹோட்டல்ல சாப்பிட்டேன். மத்தியானம் மீல்ஸ் 150 ரூபாய். சரி ஓகே சாப்பிடலாம்னு உட்கார்ந்தேன். இலையை வச்சாங்க. சப்பாத்தி ஒன்னு போட்டாங்க. சாப்பிட்டேன்... அதிலேயே பாதி வயிறு நிரம்பியிருச்சு.
அப்புறம் லைட்டா கொஞ்சம் சாப்பாடு வச்சாங்க. இதுக்கு இட்லி பொடி & நெய் வேணுமான்னு கேட்டாங்க சரி கொண்டா சாப்பிடுவோம் அப்படின்னு சொன்னேன். அது சாப்டதும் உடனே வயிறு நிறைஞ்சிருச்சு.
சப்பாத்தி சாப்பிட்ட உடனே வயிறு நிறைஞ்சிருச்சு..
சாப்பாடு கேட்டா சாப்பாடு மட்டும் கொண்டு வந்து வைங்கடா சப்பாத்தி நாங்க கேட்டோமா? சப்பாத்திய எதுக்குடா வைக்கிறீங்க? 150 ரூபாய் போச்சு...
ஒரு சப்பாத்தி, கொஞ்சூண்டு சோத்துக்கு 150 ஓவா...
No comments:
Post a Comment