Saturday, May 7, 2022

பொழுதுபோக்கல்ல!

 வாழ்க்கை

வெல்வதற்குத்தான்…
விளையாட்டல்ல!
காதல்
புரிதலுக்குத்தான்…
பொழுதுபோக்கல்ல!
சிகரம்
ஏறுவதற்குத்தான்…
எட்டிப் பார்ப்பதற்கல்ல!
அழகு
ரசிப்பதற்குத்தான்…
ருசிப்பதற்கல்ல!
முதுமை
கற்றுக்கொடுக்கத்தான்…
சபிப்பதற்கல்ல!
இயற்கை
வாழ்வதற்குத்தான்…
பாழ்படுத்துவதற்கல்ல!
செயற்கை
பயன்படுத்தத்தான்…
அழிப்பதற்கல்ல!
வெற்றி
அடைவதற்குத்தான்…
அலட்சியபடுத்துவதற்கல்ல!
அறிவு
பகிருவதற்குத்தான்…
பருகுவதற்கல்ல!
மடமை நீக்கத்தான்…
நாணுவதற்கல்ல!
நட்பு
காப்பாற்றத்தான்…
காயப்படுத்துவதற்கல்ல!
எதிரி
குறைப்பதற்குத்தான்…
கூட்டிச்செல்வதற்கல்ல!
வெளிச்சம்
நம்பிக்கைக்குத்தான்…
நாசம்செய்வதற்கல்ல!
இருள்
போக்குவதற்குத்தான்…
உருவாக்குவதற்கல்ல!
பிறப்பு வாழ்வதற்குத்தான்…
வீழ்வதற்கல்ல!
இறப்பு முற்றுப்பெறத்தான்…
தொடர்வதற்கல்ல.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...