Sunday, May 8, 2022

அன்போடு வாழ்க்கை பயணத்தில் இணைத்து செல்வர்..

 எங்கே வாழ்க்கை தொடங்கும், எங்கே வாழ்க்கை முடியும் என்பதும், நம் வாழ்க்கை பயணத்தில் இடையில் யார் யார் வருவார்கள், யார் யார் செல்வார்கள் என்பதும் யாராலும் கணிக்க முடியாதது.

நாம் யாரை சதமென நினைக்கிறோமோ அவர்கள் வெகு எளிதில் நம்மை உதறி செல்ல, யாரோ ஒருவர் சட்டென கைப்ற்றி நம்மை அன்போடு வாழ்க்கை பயணத்தில் இணைத்து செல்வர்..
"இதுவும் கடந்து போகும்" என்ற சின்ன வாக்கியத்தின் முழு அர்த்தத்தை வயதாக வயதாக வெற்று வார்த்தையாக அல்லாமல் வாழ்க்கையாக உணர முடிகிறது. அந்த உணர்வை உணர தொடங்கும் போதே பெரிய ஒட்டலில்லா தன்மை வந்துவிடுகிறது..
அந்த ஒட்டலில்லா தன்மையே வாழ்க்கையை அவ்வப்போது கொண்டாட்டமாய் வாழ கற்று கொடுக்கிறது, அனைவரையும் பாலின பேதமற்று நேசிக்க, காதலிக்க கற்று தருகிறது, குழப்ப மனநிலையில் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. நாம் நெருக்கமாக உணர்பவர்களையும், நம்மை அதீதமாக நேசிப்பவர்களையும் சற்று தூரத்தில் நிறுத்தி வைத்து அன்பு செலுத்த பழக்குகிறது..
Cheers to all ❤

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...