அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு பார்வை..
சல்மான்கானுடன் நெருக்கமான பழக்கம் முறிந்து விவேக் ஓபராய் உடன் நெருக்கம்..
கடைசியில் அதுவும் முறிந்து அபிஷேக்பச்சனுடன் திருமணம். ஐஸ்வர்யா ராயை என்றுமே யாரும் குறை சொன்னது கிடையாது. கேவலமாக பேசியதும் கிடையாது.
சிம்புவுடன் நெருக்கம். பிறகு ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவுடன் நெருக்கம். அதுவும் கடந்து இப்போது விக்னேஷ் சிவன் உடன் பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, இப்போது முறைப்படி திருமணம்.
நயன்தாராவையும் யாரும் விமர்சிக்கப் போவதில்லை. கேவலமாக பேசப்போவதில்லை. வாழ்த்தவே செய்கிறார்கள்.
திரையுலகம் அரசியல் மட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சார்ந்த மேல்மட்ட பெண்களின் வாழ்க்கை இப்படி "வழக்கத்திற்கு அப்பாற்ப்பட்ட" என நிறைய உண்டு.
தன்னுடைய சொந்த வாழ்க்கையை தன் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்வதற்கு ஆணுக்கு எவ்வளவு தூரம் உரிமை உண்டோ அதே உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு.
ஆனால் இதே உரிமை கொண்டு ஒரு ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள விரும்பினால் எவ்வளவு கேவலமாக பேசுகிறது இந்த சமூகம்..?
பெண்ணின் வாழ்க்கை கொஞ்சம் தடுமாற்றம் கண்டு சரியாக அமையாமல் போனால் அல்லது கணவன் இறந்துபோனால் ,விதவையாகும் அவளுக்கு வேறொருவர் உதவ முன்வந்தால்..
அவரது குடும்பத்தினரே அவரை எவ்வளவு தூரம் கேவலமாக பேசுகிறார்கள்.. சலிப்பாக பார்க்கிறார்கள்..
எல்லாவற்றிலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு சாபக்கேடு..
Money is always ultimate.
No comments:
Post a Comment