வெற்றி எளிதானதல்ல. எளிதாக இருந்தால் அனைவருமே அனைத்திலும் வெற்றி அடைந்து இருப்பார்கள் .
எல்லோரும் படித்து டாக்டர், இன்ஜினியர் ஆகிவிட்டால் தெருவை சுத்தம் செய்ய யார் இருப்பார். அதனால்தான் எல்லோரும் வெற்றி அடைய முடிவதில்லை. சமூகத்திற்கு இந்த படிநிலை தேவைப்படுகிறது.
சிலர் முதல் முயற்சியிலேயே இலக்கினை அடைந்து வெற்றி காண்பர்.
சிலர் என்னதான் முயற்சி செய்தாலும் மேலே வரமுடியாது.
பெரும்பாலோனோர் எப்படியும் முன்னேற வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
வெற்றிக்குத் தேவை விடாமுயற்சி.
விடாமுயற்சி இருந்தால் யார் வேண்டுமோ வெற்றியடைய முடியும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்.
திறமை ,அறிவு மட்டுமே போதாது. விடாமுயற்சியும் வேண்டும். அதுவே வெற்றிக்கான வழி.
மார்ட்டின் லூதர் கிங் சொன்ன வார்த்தைகள் இது
உன்னால் பறக்க முடியாவிட்டால் ஓடு , ஓட முடியாவிட்டால் நடந்து செல், நடக்க முடியாவிட்டால் தவழ்ந்து செல் , ஆனால் வெற்றிப்பாதையை நோக்கி செல்வதை நிறுத்தி விடாதே...
No comments:
Post a Comment