ஒருநாள் நீ கண்ணாடி போட்டு பார்
மழைல பைக் ஓட்ட முடியாது...
ஆத்துல குளத்தில ஜாலியா குளிக்க முடியாது எல்லாமே மங்களா தெரியும்..
3டி கண்ணாடி அதுக்கு மேலயே போடனும்...
ஹெல்மெட் போடுறப்ப இடைஞ்சலா இருக்கும்..
துடைக்கலாம்னு கழட்டுனா கூட மூஞ்ச பாக்க முடியல மாட்டுன்னு சொல்லுவாங்க...
தீம் பார்க்ல ஜாலியா சுத்த முடியாது எதாது ரைடுல விழுந்துருச்சுன்னா அன்னைக்கு பூரா தடவிட்டுதான் அலையனும்...
எக்ஸாம்ல ஓரக்கண்ணால பாத்து எழுத முடியாது தலைய திருப்புனா கப்புன்னு பிடிச்சுருவாய்ங்க...
நேத்தைக்கு வேலைக்கு வந்த வாத்தியார் கூட நம்ம ரவுடின்னு தெரியாம டேய் கண்ணாடின்னு தான் கூப்டுவான்... ப்ச்...
சூடா டீ காப்பி குடிச்சா ஆவி படியும்...
பெட்ல உருண்டு புரண்டு படுக்க முடியாது...
கூலிங் க்ளாஸ் போட்டு போட்டோ எடுக்கனும்னா குத்துமதிப்பாதான் போஸ் கொடுக்கணும்...
மொபைல்ல என்ன பாக்குறோம் கண்ணாடிய பாத்தே கண்டு பிடிச்சுருவாய்ங்கள்...
No comments:
Post a Comment