நண்பர்களே...
செவிலியர்கள் இரண்டாம்
தாயாய் போற்றப்பட வேண்டியவர்கள்...
தொலைக்காட்சியில் செவிலியர்களை காவல்துறை அதிகாரிகள் தரதரவென இழுத்துப்போய் கைது செய்த காட்சிகளை கண்டு
வருத்தப்பட்டேன்....
நண்பர்களே....
கொரோனா காலத்தில்
தமிழக காங்கிரஸ் தலைவர் அண்ணன் அழகிரி அவர்கள் அமைத்த கொரோனா நோயாளிகளுக்கு உதவும் பாதுகாப்பு குழுவிற்கு,
அந்தக்குழுவில் உறுப்பினராக இருந்து பணியாற்றும் போது தனிப்பட்ட முறையில் எனக்கு....
திருச்சி தஞ்சை மாவட்ட மருத்துவமனைகளில்
வறியவர்களுக்கு படுக்கை கிடைக்காமல் அலைந்த போது நூற்றுக்கும் மேற் பட்ட தொற்றாளர்களை காப்பாற்ற உதவிய செவிலியச் சொந்தங்கள் அநேகர்....
இடம், பொருள், ஏவல், காலம், நேரம்,என எதையும் பார்க்காமல் எனக்கு பேருதவி செய்து கொரோனா தொற்றாளர்களை காத்திட்ட வெள்ளுடை தரித்த தேவதைகள் அவர்கள்....
அப்போது அவர்கள் எல்லோருமே நிரந்தரமில்லாமல் குத்தகைப்பணியாளர்களாக குற்றேவல் செய்தவர்கள்....
அவர்களின் சங்கம்
அதிமுக ஆட்சியில் பணி பாதுகாப்பு பணி நிரந்தரம் கோரி வேலைநிறுத்தம் செய்தபோது
அவர்கள் பாத்ரூம் கூட போகமுடியாதபடி தண்ணீர் கனெக்சனை நிறுத்தியது
எடப்பாடியின் எதேச்சதிகா ர ஆணவ அரசு.
அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த தளபதியும் திமுகவும் செவிலியர்கள் பணி நிரந்தரத்துக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்து நள்ளிரவு நேரத்தில் போராட்டக் களத்திற்கே புடைசூழ புறப்பட்டுவந்து போராட்டத்திற்கும் ஆதரவு அளித்தார்கள்.(போட்டோ 2)
கடந்த சட்டமன்ற தேர்தலில் சமயச்சார்பற்ற
நம் கூட்டணி சார்பில் திமுக கொடுத்த எலெக்ஸன் மெநுபெஸ்ட்டோவில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் செவிலியர் பணி உறுதியும் ஒன்று.
ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும்கூட இதுவரை அவர்களுக்கு நாம் செய்த உதவி என்பது
மீண்டும் போராட்டக்களத்திற்கு வந்த அவர்களை, போராடிய செவிலியர்களை,
தரதரவென இழுத்துச்சென்று கைது செய்து வழக்குப் பதிவு செய்தது மட்டும் தான்.
இது நியாயமான செயலா?
அரசின் பல வேலைகளுக்கான ஊழியர்கள் Outsourcing செய்யப்பட்டு குறைந்த கூலிதான் கொடுத்துக் கொண்டு உள்ளார்கள்.
இது பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கையாளும் யுக்தி.
இப்போது அரசாங்கமே கார்ப்பரேட் நிறுவனமாக மாறிவருகிறது.
நல்ல முன்னேற்றம்?.
இப்படித்தான் போனமாதம் பட்டியல் இனத்தவர் 10 ஆயிரம் பேருக்கு வேலை என்றது திமுக அரசு.
உடனே சமூக வலைத்தளத்தில் உபிக்களும் பார் எங்கள் சமூகநீதி அரசை என்று வழக்கம் போல் எழுதினார்கள்
சரி நிஜமாகவே செய்யப்போகிறார்கள் என்று நினைத்து நானும்கூட வாழ்த்துப்பா பாடி நண்பர்களிடம் ஏச்சு வாங்கினேன்
ஆனால் அவர்களும் Outsourcing முறையில் தான் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள் என்பது திமுகவிலிருந்து எழுதியவர்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.
ஒரு லட்சம் கோடி கடன் வாங்கி 250கோடியில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செலவு,
25 கோடிக்கு பசுமடம் என்று செலவு செய்யும் அரசு செவிலியர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா?
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் இல்லை,
போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்றவர்களுக்கு பி.எப் பணம் கொடுக்கவில்லை.
ஆனால் நம் கூட்டணி வெற்றிபெற ஆட்சி அமைக்க அரசுக்கு ஓட்டுப்போட்டவர்கள் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான்
என்பதை மறந்தே போனோம்.
இன்று அவர்கள் வயிற்றில் தான் திமுக
அரசு அடித்திருக்கிறது.
எல்லாரையும் பிச்சை எடுக்க வைத்துவிட்டு இரண்டு குடும்பம் மட்டுமே வாழ வேண்டும் என பாடுபடும் மோடி அரசை குறை சொல்லும் நாம்
கூட்டணிக்கட்சியின் ஆட்சி என்பதற்காக சமூகநீதியை
சாகடிப்பது நியாயமா என
திமுகவை சாடாதது குறித்து காங்கிரஸ் தலைவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
செவிலியர்களின் கோரிக்கைகளை நிபந்தனையின்றி நிறைவேற்றிக்கொடுக்க
தமிழக காங்கிரஸ் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என
பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
No comments:
Post a Comment