அவருக்கு தனி சமையல் அறை, படுக்கை, குக்கர் உட்பட பல்வேறு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், இதற்காக, சசிகலா தரப்பிடமிருந்து, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் மீது, டி.ஐ.ஜி., ரூபா, ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டினார். மாநில சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யிடம் ஆதாரங்களை சமர்ப்பித்தார்.உயர் அதிகாரி அனுமதியின்றி புகார் செய்ததாகவும், ஊடகங்களில் வெளியிட்டு தன் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், ரூபா மீது, கீழமை நீதிமன்றத்தில் சத்யநாராயணராவ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
அதை நீதிமன்றம் ஏற்று, விசாரணை நடத்தியது.இதை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரூபா மேல்முறையீடு செய்தார்.இவ்வழக்கு, நீதிபதி நாக பிரசன்னா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, இரு அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் கடிதப் போக்குவரத்தை, மான நஷ்டமாகக் கருத முடியாது எனக் கூறிய நீதிபதி, வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.சத்யநாராயணராவ் ஓய்வு பெற்று விட்ட நிலையில், ரூபா, காவேரி எம்போரியம் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
No comments:
Post a Comment