Thursday, June 16, 2022

பேரறிவாளனின் #வழக்கும் #கோடிக்கணக்கில் #சம்பாதித்த #வழக்கறிஞர்களும்!

 வழக்கறிஞர்களுக்குப் பணம் கொடுத்தது யார்?

நண்பர்களே...
ராஜீவ் காந்தி கொலை வழக்கால் அதிகம்
சம்பாதித்தவர்கள் யார் என்றால் வழக்கறிஞர்கள் தான்
என்று உறுதியாகக் கூறலாம்.
பேரறிவாளனுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில்
தடா நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும்
மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் வாதாடி இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, சட்டரீதியான நடவடிக்கைகளில்
அவருக்கு ஆலோசனை வழங்க,
சிறையில் சென்று
அடிக்கடி அவரைச் சந்தித்துத் தகவல்களைப் பெற,
ஆவணங்களில் கையெழுத்துப்பெற என்று பல்வேறு
செயல்பாடுகளில் பல்வேறு வழக்கறிஞர்கள்
அவருக்காகப் பணியாற்றி இருக்கிறார்கள்.
ஏ. தொல்காப்பியன் முதல், ராம் ஜெத்மலானி வரை
பலரையும் குறிப்பிட முடியும்.
குற்றம் சுமத்தப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை
வழங்கியது பூந்தமல்லி தடா நீதிமன்றம் 1998இல்.
மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் நான்கு பேருக்கு
(நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன்) மட்டும்
மரண தண்டனை 1999 மே 11இல் உறுதி செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு (appeal) மற்றும்
மறுபரிசீலனை (REVIEW) வழக்கின்போது,
பேரறிவாளன் உள்ளிட்ட நால்வர் சார்பாக, திரு நடராசன் (உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்) வாதாடினார்.
அவருக்கு ஒரு மணிநேர சம்பளம்
அப்போதே ஐந்து லட்ச ரூபாய் என்று
சொல்லக் கேட்டிருக்கிறேன்...
இதில் தீர்ப்பு அக்டோபர் 8, 1999 அன்று வெளிவந்தது.
நால்வரின் மரண தண்டனையை இந்தத் தீர்ப்பு
உறுதி செய்தது.
என்றாலும், மே 11 தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட
26 பேர் மீதான தடா சட்டப் பிரிவுகளின் மீதான
குற்றங்கள் (3(3), 3(4) மற்றும் 5) நிரூபிக்கப்படவில்லை
என்று நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.
நம் இதயத்தலைவர்
ராஜீவ் கொலையும் சரி, கொலை வழக்கும் சரி,
தொடக்கம் முதலே கோடிக்கணக்கில் பணம் புழங்கும்
விவகாரம் ஆகும்.
தொடக்கம் முதல் இன்று வரை
மட்டுமல்ல, இனிமேலும், இந்த ஒட்டுமொத்த
விவகாரத்தில் வெளிநாட்டினரின் பங்கும்
பங்களிப்பும் பணமும் இருக்கின்றன.
ராஜீவ் கொலைக்காகக் கண்ணீர் வடிக்கும் நம்மைப்போன்ற தேசாபிமானிகளும்தங்கள் மாநிலத்தில் இச்சதி அரங்கேறி தமிழனின் பெருமைக்கு ஒரு மிகப்பெரிய கரும்புள்ளி வந்துவிட்டதே என்று வருத்தப்பட்டு அழுத தமிழக
மக்கள் இந்த உண்மையை அறிய மாட்டார்கள்..
அப்பாவிகள்!
ராஜீவ் கொலையாளிகளுக்காகக்
கண்ணீர் வடிக்கும் பணந்திண்ணி வவ்வால்களும் இந்த உண்மையை
மக்களுக்கு தெரியும்படி நடக்க மாட்டார்கள்....
திருடர்கள்!
நண்பர்களே....
கர்நாடகத்தில் உள்ள பெல்காம் சிறையில் பல்லாண்டுகளாக வீரப்பனின்
கூட்டாளிகள் நால்வர் ஆயுள் தண்டனை அனுபவித்து
வருகின்றனர்.
ஒரு வெடிகுண்டு வழக்கில் இந்த
நால்வருக்கும் மரண தண்டனை வழங்கப் பட்டது.
பின்னர் உச்சநீதிமன்றம் அவர்களின் மரண
தண்டனையை ஆயுளாகக் குறைத்தது.
நண்பர்களே
உண்மையில்
இவர்கள் நிரபராதிகளே.
இவர்களை, இந்த நான்கு தமிழர்களை
தொப்புள்கொடி சொந்தங்களை விடுதலை
செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்க ஒருவர்
கூட முன்வரவில்லை. ஏன்?
குரல் கொடுக்கும்
போராளிகளுக்குப் பணம் கொடுக்க இந்த
நால்வரிடமும் பணம் இல்லை.
அவர்களுக்கு
எந்த வெளிநாட்டுத் தொடர்பும் இல்லை.
என்பதைத்தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?...
இதில் பெரிய கொடுமை என்ன வென்றால் வீரப்பனின் போட்டோவைப்
போட்டு மண்ணைக்காத்த
மாகானுபாவன்
என்று வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து
வன்னிய இளைஞர்களுக்கு
தவறான பாதையைக் காட்டி
ஒரு இனத்தையே அழிக்கத்துடிக்கும்
டாக்டர் ராமதாஸோ
அல்லது மாற்றம் ஏமாற்றம் அன்புமணியோ
ஒரு துறும்பையாவது எடுத்துப்போட்டிருப்பார்களா?
காசு பணம் துட்டு மணி அந்த தரித்திரம் பிடித்த தமிழர்களுக்கு தர ஆள் இல்லை என்பது அவர்களுக்கு நன்றாய்தெரியும்....
இந்த நாடு எப்போதான் இப்படிப்பட்ட
இன,மொழி ஜாதி பெயர்சொல்லி ஏமாற்றுபவர்களை
துரத்தி துரத்தி அடிப்பார்களோ
அப்போதுதான்
விடியலைத் தர முடியும்!
இந்த போட்டோவைப் பாருங்கள்
கொலை செய்வதற்கு அரைமணி நேரம்முன்பு இந்த கொலைபாதகர்கள் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் நிற்கிறார்களே
அவர்களை போற்ற ஒரு கும்பல்....
ச்சீய் நாயும் பிழைக்கும்
இந்தப் பிழைப்பு!
May be an image of 4 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...