தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், 'டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 300' என்ற சொகுசு காரை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, நேரடியாக இறக்குமதி செய்துள்ளார்.
தமிழக அமைச்சர்கள், அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள 'இன்னோவா கிரிஸ்டா' கார்களை பயன்படுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினிடம் கூட இல்லாத, 'டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 300' என்ற, புத்தம் புதிய 2022ம் ஆண்டு மாடல், எஸ்.யூ.வி., ரக காரை, அமைச்சர் நேரு வாங்கி உள்ளார்.இவர் ஏற்கனவே, லேண்ட் க்ரூஸர் ரக கார்களை தான் பயன்படுத்தி வந்துள்ளார். அமைச்சரான பின், தற்போது புதிய வரவாக, 'லேண்ட் க்ரூஸர் எல்சி 300' எனும் ஸ்போர்ட்ஸ் மாடல் காரை, இறக்குமதி செய்துள்ளார்.இந்த ரக காரை, டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்வதாக அறிவித்ததும், பல நாடுகளில் நிறைய பேர் 'புக்' செய்து, நான்கு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
இந்தியாவில் இந்த காரின் அறிமுக தேதி, அடுத்த ஆண்டு, மார்ச் 2 என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அப்படி இருக்கையில், அமைச்சர் நேரு அந்த காரை, நேரடியாக இறக்குமதி செய்துள்ளதாக தெரிகிறது. புதிய காரின் விலையை, வரும் பண்டிகை காலத்தில் தான் டொயோட்டா அறிவிக்க உள்ளது. இருப்பினும், 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து, இந்த சொகுசு காரை, நேரு இறக்குமதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment