என்னை அப்படி நினைக்கிறார்கள் ?? இப்படி பேசுகிறார்கள் ?? நான் எப்படி இருக்கவேண்டும் என்று ஆளுக்கு ஓர் விதமாய் தீர்மானிக்கிறார்கள் ??!! என்ன செய்யா ???? ( ஓர் அன்பர் கேள்வி )
ஊருக்கு வாழ நாம் வரவில்லை !! உங்களுக்கு என்று வாழவே வந்துள்ளோம் !! இதில் யாரையும் திருப்தி படுத்தவே முடியாது !!
ஏன் உங்களையே உங்களால் திருப்தி படுத்த முடிகிறதா ??
மற்றவர்களை எல்லாம் அப்படி சொல்வது இல்லையே ??
மற்றவர்கள் அவர்கள் எதிர்பார்த்தபடி நடிப்பதை அவர்கள் விரும்புகிறார்கள் !! நீயோ அவர்களிடம் உண்மையாக இருக்கிறேன் என்று இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை !!
ஏன் என்றால் ??
அவர்கள் பிறரிடம் நடிப்பதை போலவே தன்னிடமும் நடிக்கவே ஆள் தேடுகிறார்கள் !! அப்படி நடிப்பவர்களோடுதான் வாழ்வது வாழ்வு என்று தீர்மானித்து நடிக்க தேடுபவர்களிடம் ?? போய்
உண்மையாக இருப்பேன் என்றால் யாருக்கு பிடிக்கும் ???
இதற்க்கு தீர்வு
ஒன்று
நான் இப்படித்தான் என்னை அவன் இப்படித்தான் இருக்க வைத்து இருக்கான் ஆதலால் நான் இப்படித்தான், என்னை எப்படி மற்றவர்கள் பேசினாலும் நினைத்தாலும் அதை பற்றிய கவலையோ வருத்தமோ என்னை வாட்டும் என்ற கருதல் கடந்து வாழ்வது !!
இரண்டாவது
யார் என்ன எதிர்பார்க்கிறார்கள் அவர்களுக்கு ஏற்றார்போல என்னை நடிக்கவை இறைவா !! என்று இறைவனையே முன்னிறுத்தி நடிக்கிறேன் என்று எனக்கு தெரிந்த நடிப்பு, உண்மை என்று நடிப்பையே விரும்புபவர்கள் அசந்து போகும்படி நடிப்பது !!
எதற்கும் இறைக்கருணையே துணை நிற்கிறது என்ற தெளிவோடு !!
வெளியே நடித்தாலும் ?? உள்ளே நடிக்கேறேன் என்று நாமே நம் நடிப்புக்கு ஏமாறது நினைவுபடுத்தி கொண்டே வாழ்வது !!??
மாறும் அனைத்தும் மாறாதவன் திருவருளால், மாற்றத்தை மாற்றம் என்று ஏற்றுக்கொண்டு வாழ்வதே வாழ்க்கை !! ஏமாற்றம் என்று முடங்கி போகாது !!??
உங்கள் விருப்பம் உங்களுக்கு இறைவன் அருளிய சுகந்திரம் !!
அதையும் மாற்றிக்கொண்டே இருக்க வைத்துக்கொண்டே இருப்பான் !!
மாறாதவனை பற்றுவோம் !!
அவனால் நிகழும் மாற்றத்தை அனுபவிப்போம் !!
மாறமாட்டேன் என்ற தீர்மானிக்கும் சுகந்திரமே துன்பத்தை, துயரத்தை நாமே விரும்ப நம்மிடம் சேர்க்கிறது என்ற தெளிவோம் !!
நாளும் நிமிடமும் தெளிவித்துகொண்டே இருக்கிறான் !! தெளியவேண்டியவன் என்று நம்மை அறிந்தவன் கருணையால் !!
No comments:
Post a Comment