தமிழகத்தின் தன் நிகரில்லா மக்கள் தலைவராகவும், மாபெரும் தியாகியாகவுமான செக்கிழுந்த செம்மல் வ.உ.சிதம்பரனார் சிறைபடவும், துயருரவும் காரணமானவர் அந்நாள் தூத்துகுடி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷ் துரை ! இவரை போற்றும் வகையில் மத்திய பாஜக அரசின் நிதி உதவியால் நினைவு மண்படம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் தோன்றியுள்ளன! இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வ.உ.சி ஆய்வு வட்டத்தின் செயலாளர் குருசாமி மயில்வாகனன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். பல்வேறு தேசபக்த அமைப்புகளும்,சமூக ஆர்வலர்களுமே இதை எதிர்க்கின்றனர்.
”ஆஷ் துரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவியதாகவும், தீண்டாமைக்கு எதிராக செயல் பட்டதாகவும் பல்வேறு புனைவுகள் உள்ளன. இது, உண்மையாக இருக்கும் பட்சத்தில் எதையும் ஆவணப்படுத்தும் பிரிட்டிஷார் இதை ஆவணப்படுத்தாமல் இருக்கமாட்டார்கள். அப்படி எதுவும் வரலாற்று ஆவணங்கள் இல்லை. எனவே, அவை திட்டமிட்ட புனைவு , சுவையான கட்டுக் கதைகள்” என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்!
புதுபிக்கப்படும் ஆஷ் மணி மண்டபம்
No comments:
Post a Comment