எலி சிலையாய் இருந்தால் பூஜை செய்கிறோம்
உயிரோடு இருந்தால் சாக,அடிக்கிறோம்
பாம்பு சிலையா இருந்தால் பாலை ஊத்துகிறோம்
உயிரோடு இருந்தால் அடித்து சாகடிக்கிறோம்
தாய் தந்தை போட்டோவில் இருந்தால் மாலை போட்டு வணங்குகிறோம்
உயிரோடு இருந்தால் அனாதை இல்லத்தில் விட்டு விடுகிறோம்
இறந்து போனவனுக்கு தோள் கொடுக்கிறோம்
உயாரோடு இருப்பவனுக்கு கை கொடுத்து உதவமாட்டோம்
கல்லிலே தெய்வதன்மை இருக்கின்றது என்று தெரிந்த நமக்கு
மனிதனில் மனிதத்தன்மை இருக்கிறதென்று கண்டு பிடிக்காமல் போகிறோம்
உயிரில்லாதவற்றின் மேல் பக்தி எதற்கு
உயிரோடு இருந்தால் வெறுப்பு எதற்கு
ஆலோசனை செய்யலாம் கொஞ்சமாக!
அன்புடன்.
புதுகவிதையாக ஒருமுறை படித்த ஞாபகம்.:
இப்ப ஊற்றும் பாலை, இரண்டுநாள் முன்னாடி ஊத்தியிருந்தீனா இன்னும் கொஞ்சநாள் உயிரோடு இருந்திருப்பேன்டா மகனே...
No comments:
Post a Comment