அடடே.., "நம்ம தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை..!"
நமது வீட்டின் வரவேற்பறையில் showcase ல் கண்ணாடிக்குள் அடைத்து வைக்கப்பட்ட அலங்காரப் பொருள் இது..!
இதே பொம்மையை சிறுகுழந்தைகளிடம் கொடுத்துப் பாருங்கள்.... ஆச்சரியத்துடன் மணிக்கணக்கில் விளையாடி மகிழ்வார்கள். நாமும் கூட சிறுவயதில் இந்த பொம்மையில் மகிழ்ந்திருப்போம்.ஆனால் இன்று, கண்ணாடிக்குள் அடைத்து விட்டோம்...,
இப்படித் தான் நமது மகிழ்ச்சியையும், நமது நகைச்சுவை உணர்வையும் பல நேரம் பூட்டி வைத்து விடுகிறோம்.!
நம் உடல் ஆரோக்கியத்திற்கும், குடும்ப மகிழ்ச்சிக்கும் பெரிதும் உதவக் கூடிய நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி,
மகிழ்ந்து மகிழ்விப்போம்..!
வாழ்வினிது சிந்தித்து செயலாற்றுங்கள்.
No comments:
Post a Comment