திருமணத்திற்கு ஊரெல்லாம் பெண் தேடி எங்கயும் செட் ஆகலனு பெரியமனசு வச்சு போனா போகுதேனு இந்த ஆசிரமத்தில் இருக்கும் ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்து வாழ்க்கை தரலாம் என முடிவு பண்றிங்க பாருங்க ரொம்ப சந்தோசம்.
ஆனா நீங்க நினைக்கிறமாதிரி எல்லாம் பெண்கள் அங்கு கிடையாது அப்படியே இருந்தாலும் உங்க வயசுக்கு செட் ஆகாது , செட் ஆகறமாதிரி இருந்தாலும் வாபா உன்னை தான் பாத்துட்டு இருந்தேன் நீ வராம தான் பொண்ணு கல்யாணம் ஆகாம தவியாதவிக்குதுனு தூக்கி குடுத்திடவும் மாட்டாங்க அதுக்கு எல்லாம் ஏகப்பட்ட சட்டம் , சம்பிரதாயம் இருக்கு.
நம்மல விட அவங்க எல்லாருக்கும் சைல்ட் ரைட்ஸ் , சைல்டு புரொடக்சன்ஸ் , பெண் உரிமை என அனைத்து சட்டங்களும் நல்லா சொல்லி கொடுத்து தான் வளர்த்தறாங்க.
( சத்தமா பேசினா கூட சட்டம் பேசுவாங்க இந்த பொண்ணுங்க , பெற்றோர் இருக்கும் பெண்கள் பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு பயந்து அச்சசோ நாம புருசன்ட கோவிச்சுட்டு சண்டை போட்டு போனா அவங்க அதை சொல்லுவாங்க இவங்க இதை சொல்லுவாங்கனு கொஞ்சமாவது பயப்படுவாங்க பட் இங்க அப்படி எல்லாம் இல்லை சர்தான் போடானு போயிட்டே இருப்பாங்க 12 பி இல்லைனா 12 சி னு )
அப்படியே கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் இருந்தா தூக்கி போட்டு உங்க ஏரியாவுல சாதி , மதம் என பாக்காம வாழ்க்கை இளந்தவர்கள் , வாழ்க்கையில் உங்க கண் முன் கஷ்டபடுபவர்களுக்கு தைரியாம வீட்ல பேசி வாழ்க்கை தருவதற்கு முயற்சிக்கலாம்
வாழ்த்துக்கள்
.
No comments:
Post a Comment