'சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா?' என்ற ஒரு சொலவடை உண்டு. தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும், தி.மு.க., அரசின் அணுகுமுறை ஒவ்வொன்றும், அந்த சொலவடையையே நினைவூட்டுகிறது. நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுகள் சார்பில் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இலங்கைக்கு சென்று, சீதையை காப்பாற்றி அழைத்து வர, ராமர் -சேது பாலம் கட்ட, தன் வானரப் படையுடன் பணியை துவக்கிய போது, ஒரு அணில், தானும் அந்தப் பாலம் கட்ட, கடல் நீரில் நனைந்தும், மணலில் புரண்டும் உதவியது. அது போல, அர்ஜுன் சம்பத்தின் ஹிந்து மக்கள் கட்சியினர், 'சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றுவோம், தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்' என்ற முழக்கத்துடன், ஒரு பிரசார வாகனத்தில், மாநிலம் முழுதும் சுற்றுப்பயணத்தை, வேலுாரில் இருந்து துவக்கியுள்ளனர்.அந்த வாகனத்தில், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், 'ஒன்றியம் அல்ல இந்தியா! திராவிடம் அல்ல தேசியமே' என்று எழுதி வைத்திருந்தனர். அந்த வாசகங்களை, வேலுார் காவல் துறையினர் காகிதத்தை ஒட்டி மறைத்திருக்கின்றனர்.காவல் துறையினருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? இந்த அநாகரிகமான செயலை, வேலுார் காவல் துறையினர் மேலிட உத்தரவுப்படி செய்தனரா அல்லது இவ்வாறு செய்தால், ஆட்சியாளர்கள் தங்களை பாராட்டி, சுதந்திர தின விழாவில், விருது வழங்கி கவுரவிப்பர் என்ற நோக்கத்தில் செய்தனரா என்பது விளங்கவில்லை.
காவல் துறையினர் தங்கள் மனம் போன போக்கில் செய்திருந்தால், அது தவறு. இல்லை... இந்த அநாகரிகத்தை, மேலிட உத்தரவுப்படி தான் செய்தனர் என்றால், அது இமாலயத் தவறு.நாட்டில் அவசர கதியில் தீர்க்க வேண்டிய ஏராளமான பணிகள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்க, ஆட்சியாளர்கள், 'ஒன்றியமல்ல இந்தியா; திராவிடமல்ல தேசியமே' என்ற வார்த்தைகளின் மீது, காகிதத்தை ஒட்டி மறைத்து கொண்டிருக்கின்றனர்என்றால், இவர்களின் நிர்வாகத் திறமையையும், மக்கள் பிரச்னைகள் மீது கொண்டுள்ளஅக்கறையையும் என்னவென்று சொல்வது?அந்த பிரசார வாகனத்தின் மீது எழுதியுள்ள வார்த்தைகளின் மீது, காகிதத்தை ஒட்டி மறைத்து விடுவதால், இந்தியா ஒன்றியமாகி விடாது; தேசியம் திராவிடமாகி விடாது. ஆட்சியாளர்களுக்கும், சகிப்புத்தன்மைக்கும் வெகுதுாரம் என்பதை, அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும், செயல்பாடுகளும் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment