இலக்குகளை நிர்ணயம் செய்து தோல்வியடைந்தால் இதைவிட சிறப்பான வாழ்க்கைக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களை பக்குவப்படுத்துகிறான் என்பதை உணர்வோம் .''.....!!! - விளக்கும் எளிய கதை.
"தோல்வி என்று ஒன்று வந்து விட்டால் நாம் நிலை குலைந்து போய் விடுகிறோம்.
எத்தனை முயற்சிகள், உழைப்புகள் எல்லாம் வீண் என்று நமக்குள்ளேயே களைத்துப் போகிறோம்.
தோல்வியை வேறு கோணத்தில் சிந்திப்போமா...
நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் உங்கள் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட திசையில் பயணித்திருக்கும்.
ஒரு தோல்வியின் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் இதைவிட ஒரு சிறப்பான வாழ்க்கை அமைய உங்களுக்கு வழிகாட்ட
நினைத்திருக்கலாம்.
ஒரு நண்பர் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மார்க்குகள் எடுக்க முடியாததால் இன்ஜினியரிங்கில் சேர முடியவில்லை. எல்லோரும் அவரை தோல்வியடைந்தவனாக பார்த்தார்கள்.
ஆனால் அவர் கணிதம் படித்து, கணினி தொடர்பான வகுப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்று இன்று 100 பேருக்கு மேல் அவர் கம்பெனியில் வேலை பார்க்கின்றனர்.
ஒரு வேளை இன்ஜினியரிங் படித்திருந்தால் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை
பார்த்துக் கொண்டிருப்பார்..
ஒரு நண்பர் ஆரம்ப கட்டத்தில் ஏதேதோ முயற்சி செய்தார். எல்லாம் தோல்வி அல்லது மனதுக்கு பிடிக்கவில்லை.
யோகாவில் நுழைந்தார். எல்லோரும் திரும்பப் பார்க்கும்படி தன்னை உயர்த்திக் கொண்டார். உலகம் முழுவதும் அவருக்கு நண்பர்கள் வரவேற்பு.
இலக்குகளை நிர்ணயம் செய்து தோல்வியடைந்தால் மனதை தளர விடாதீர்கள். இதைவிட சிறப்பான வாழ்க்கைக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களை பக்குவப் படுத்துகிறான் என்பதை உணர்வோம் ...
நீங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய திட்டத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களுக்காக வைத்திருக்கிறார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக உங்கள் பல திட்டங்களை தடம் புரட்டுகிறார்.
உலகம் தோல்வி என்று அழைப்பதை நாம் திருப்புமுனை என்று அழைப்போம்...
எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் வானம் தொட்டுவிடும் தூரம் தான்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைதியாக அமோகமாக அமைய
வாழ்த்துகள்
.
No comments:
Post a Comment