பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா தனது முதுமைக் காலத்தில் ஒரு நாள் மிகவும் நெஞ்சுவலியால் , அவதிப்பட்டபோது , தன்னுடைய மருத்துவருக்கு போன் செய்து , நெஞ்சுவலி அதிகமா இருக்கு , எனவே தன் வீட்டிற்கு உடனே வருமாறு அழைத்தார் . அதற்கு மருத்துவர் தன்னுடைய கிளினிக்கில் நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர் . எனவே தன்னால் வரமுடியாது , ஏன் நீங்க கிளினிக் வரவேண்டியதுதானே ? என்றார் . ஷா , தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை , காபி போட்டு குடிக்க முடியவில்லை . தொடர்ந்து நிற்கவே முடியவில்லை என்றார் . சரியென்று மருத்துவரும் பெர்னார்ட்ஷா வீட்டிற்கு வந்தார் . மாடியில் தங்கியிருந்த ஷாவைப் பார்க்க படியேறிவந்தார் . ஷாவைக் காட்டிலும் முதியவரான மருத்துவருக்கு மூச்சுவாங்க தன்னுடைய நெஞ்சைப் பிடித்தபடி சேரில் அமர்ந்துவிட்டார் . அதைப்பார்த்து பதறிப்போன ஷா எழுந்து சூடாக காபி போட்டுவந்து டாக்டருக்கு கொடுத்து , அவரின் நெஞ்சைத் தடவிவிட்டபடி நின்றார் . டாக்டர் , காபி குடித்து முடித்து , கூலாக தன்னுடைய பேப்பர்பேடை எடுத்து 20 பவுண்ட்ஸ் பில் எழுதி பெர்னார்ட்ஷா கையில் கொடுத்தார் . ஷா , சிரித்துக் கொண்டே டாக்டரைப் பார்த்து , என்னப்பா டாக்டர் இது , எனக்கு வைத்தியம் பார்க்க வந்த உனக்கு நெஞ்சுவலி வந்து நான் தானே பணிவிடை செய்தேன் . எனக்கே பில் எழுதி தருகிறாயே ? எனக்கேட்டார் . அதற்கு டாக்டர் உங்களுக்கு பார்த்த வைத்தியக்குத்தாங்க இந்த ஃபீஸ் என்றார் . மீண்டும் டாக்டர் சொன்னார் . . . , போனில் என்னிடம் என்னவெல்லாம் பிரச்சினை சொன்னீர்கள் . . . , எழுந்து நடக்க முடியவில்லை என்றீர்கள் . இப்போ ஓடோடிவந்தீர்கள் . உங்களுக்கே காபி போட்டுக்கொள்ள முடியவில்லை , என்றீர்கள் . இப்ப எனக்கும் காபி போட்டு தந்தீங்க . தொடர்ந்து நிற்கவே முடியலைன்னு , சொன்னீங்க . இப்போ அரைமணி நேரமா நிற்கிறீர்கள் என்று கூறிய டாக்டர் மேலும் தொடர்ந்தார் . அப்பொழுது உங்கள் கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள் . அதனால் அவை பெரிதாக தெரிந்தன . இப்போ எனது கஷ்டத்தை பார்த்ததால் உங்களின் கஷ்டம் மறந்து விட்டது என்றார் , இந்த கலந்துரையாடலில் எத்தனை எதார்த்தம் இருக்கிறது பாருங்கள் . நம்முடைய கவலைகளையே நாம் எண்ணி கொண்டிருந்தால் அவை பூதாகாரமாகத்தான் தெரியும் . பிறரின் கவலைகளையும் நினைத்துப் பாருங்கள் . அவற்றின் முன்பு நம்முடைய கவலைகள் புஸ்வானமாகி போகும் , கவலைகள் மறப்போம் .
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment