சிவாஜிகணேசன் எனும் மகத்தான நடிகனின் மிக சிறந்த படங்கள் ஏராளம், ஆனால் அதிசிறந்த நடிப்பினைஅந்த மகா நடிகன் தேசாபிமான படங்களுக்கும், இந்து தெய்வ வேடங்களுக்கும், அடியார் வேடங்களுகுக்குமே கொடுத்திருந்தான்
தேசாபிமானிகளான கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற பெரும் அடையாளங்களை உணர்ச்சி பொங்க நம்முன் நிறுத்திவன் அவன்
சிவபெருமான் உருவம் முதல் வீரபாகு, நாரதர் உருவம் வரை தன் கணீர் குரலால் காட்டி தந்தவன் அவன்
கண்ணன், கர்ணன் முதல் ராமன் வரை இதிகாச பாத்திரங்களையெல்லாம் திரையில் நமக்கு சுமந்து காட்டியவன் அவன்
விசுவாமித்திரன் முதல் எத்தனையோ ரிஷிகளை நம் கண்ணில் காட்டிய வித்தகன் அவன்
ராஜராஜசோழன் எப்படி இருந்திருப்பான் எப்படி உறுமியிருப்பான் என்பதை திருநீறும் பட்டையுமாக வந்து காட்டி தந்தவன் அவன்
மகாகவி காளிதாஸ் எப்படி இருந்திருப்பான் என நம்முன் உருமாறி நின்றவன் அவன்
இந்து அவதாரங்கள், கவிஞர்கள், அடியார்கள், அவதார வேடங்கள், இந்து அரசர்கள், இந்து வேத ஞானிகள், ரிஷிகள், பக்தர்கள் என இந்துமததுக்கு திரையில் அவன் அற்றிய பணிகள் அதிகம்
இந்து வேடத்தில் நடிப்பதெல்லாம் பிற்போக்கு தனம் என்றும்,நாகரீகமில்லை என கருதபட்ட காலங்கள்
இதனாலே வீரபாண்டிய கட்டம்பொம்மன் படத்துக்கு டெல்லி முகத்தை திருப்பியபொழுதும் எகிப்து அதிபர் நாசர் விருது வழங்கினான்
அந்த மகா நடிகன் வ.உ.சியாக ஜொலித்ததற்கு காங்கிரஸ் அரசு விருது கொடுக்கவில்லை, பாரத விலாசில் இந்தியனாக வந்ததற்கு இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை
மாறாக அமெரிக்க அரசுதான் "கவுரவ மேயராக" கொண்டாடியது
ஆம், வரலாற்றில் மிகபெரிய அநீதி இந்தியாவில் சிவாஜிக்கு இழைக்கபட்டது
நேரு, இந்திரா, காமராஜர் என தன் ஆதரவினை தெரிவித்த தேசாபிமானி
ஆனால் எகிப்தியனும், பிரான்சும், அமெரிக்காவும், மலேசியாவும், சிங்கப்பூரும் இன்னும் பல நாடுகளும் ஏன் அன்றைய உலகில் சிறந்த நடிகன் பிராண்டோவே கொண்டாடிய பொழுதும் இந்திய அரசு தயங்கியது ஏன்?
அவனுக்குரிய அங்கீகாரம் கொடுக்கபடவில்லையே ஏன்?
ஒரே ஒரு விஷயம்தான்.சிவாஜி திருநீறு பூசி நின்ற இந்து, தேசத்தை நேசித்த இந்து
ஆம், அந்த மகா நடிகனை இந்து என்பதற்காவும் அக்காலங்களில் திருநீறு பூசாமல் நடிப்பது நாகரீகம் என கருதபட்ட காலத்தில் இந்துவாகவும் புராண வேடங்களையும் தைரியமாக கொடுத்ததற்காக அவன் ஓரம்கட்டபட்டான்
தமிழக திரையுலகின் எப்பக்கம் திருப்பினாலும் காணபடும் வஞ்சகம் இது.
சிவாஜி கணேசனின் அதி உச்ச நடிப்பு வெளிபட்ட படம் என ஒரு படத்தை சொல்ல முடியும், திருவருட்செல்வன் எனும் அந்த நாயன்மார் வாழ்க்கை படம்
அதில் சோழமன்னன், சேக்கிழார், சிறுதொண்ட நாயனார், சுந்தரர் என அழகாக உருக்கமாக நடித்திருந்தார் சிவாஜி கணேசன்..
ஆம் சுந்தரர் எப்படி இருந்தார், எப்படி வாழ்ந்தார்,எப்படி சிவ பக்தியில் உருகியிருந்தார் என்பதை அணு அணுவாக உருகி நடித்து உலகுக்கு காட்டினார் சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன் ஆயிரம் வேடங்களில் நடித்திருந்தாலும் அவரின் ஒப்பற்ற நடிப்பும் உருக்கமும் பொருத்தமும் நிறைந்திருந்த பூரணத்துவ வேடம் என்பது அப்பர் சுவாமி வேடமே
நிச்சயம் அதற்கு விருது கொடுத்திருக்க வேண்டும், கொண்டாடியிருக்க வேண்டும் அந்த வேடம் வரலாற்றில் நின்றிருக்க வேண்டும்
ஆனால் இந்து அவதாரங்களையோ அடியார்களையோ மறைக்க வேண்டும் என்ற சிந்தனையுள்ள மாநிலத்தில் அதெல்லாம் சாத்தியமில்லை
அந்த படத்துக்கு விருதுமில்லை, பத்திரிகைகளில் பராசக்தி, கட்டபொம்மன் பாத்திரங்கள் வந்த அளவு அது வரவுமில்லை ,
ஒரே காரணம் அது நாயன்மார் கதை..
சிவாஜிகணேசனின் தனி சிறப்பும் ஒப்பற்ற நடிப்பும் கொண்ட படம் என்றால் அது திருவருட்செல்வர் படமே அதில் ஒரு காலமும் சந்தேகமே இல்லை..
திருவிளையாடல் முதல் ராஜரிஷி வரை சிவாஜி அந்த தெய்வீக வடிவங்களை நம் கண் முன் நிறுத்தியிருந்தார், ஆனால் அதற்காக அந்த நடிகன் கொண்டாடபட்டானா என்றால் இல்லை
ஒரு ஊடகம் அதை சொல்லியிருக்குமா என்றால் இல்லை
இந்திய நாடு என் வீடு" என பாடி நின்ற அவன் படத்தை விட
"இந்துஸ்தான் ஜிந்தாபாத்" என கொந்தளித்த அவன் படத்தை விட,
"சிந்து நதியின் இசை நிலவினிலே" என கண்களை பெருமையாக உருட்டி நின்ற அவன் படத்தைவிட ,
"வானம் பொழிகின்றது பூமி விளைகின்றது, மன்னவன் நாட்டில் அன்னியருக்கு இல்லை வரி" என முழங்கி நின்ற அவன் படத்தை விட தேசாபிமான படம் என எதை காட்டமுடியும்?
இந்நாட்டில் தேசாபிமான படங்களுக்கும், வேடங்களுக்கும் பிதாமகன் அவன்
சிவபெருமான் முதல் சிவனடியார் வரை, கண்ணன் முதல் காளிதாசன் வரை இந்து வேடங்களுக்கு அவனை விட்டால் யார் உண்டு?
இன்றும் என்றும் தேசாபிமான படங்களுக்கும், பக்தி படங்களுக்கும் அவன் நடிப்பே பிரதானம், அது ஒன்றே ஆறுதல்
அவ்வகையில் தேசம், இந்துமதம் என்ற உணர்வுக்கும் உயிருக்கும் அவன் செய்த சேவை மிக பெரிது, அதை இன்னொரு நடிகன் செய்ததுமில்லை செய்ய போவதுமில்லை
கஞ்சன் என்றார்கள், மறைமுகமாக அவன் எவ்வளவு செய்தான் என்பதற்கு காஞ்சி பெரியவரே சாட்சி, அந்த செய்திகள் இங்கு அதிகம் தெரியபடுத்தபடவில்லை
காஞ்சி பெரியவரிடம் ஆசிவாங்க சென்ற சிவாஜியிடம் சொல்கின்றார் அந்த மகான் "திருச்சி கோவில்ல ஒரு யானை நின்னுச்சி, யார் கொடுத்தான்னு கேட்டேன் உங்க பெயரை சொன்னாங்க
சென்னையில சில கோவில்ல கேட்டேன் உங்க பேரதான் சொன்னா.. இன்னும் நிறைய கோவில்ல சொன்னாங்க, நிறைய தெய்வகாரியம் செய்றீங்க
நிறைய யானை கொடுக்குறீங்க, திருபணி நிறைய செய்றீன்க, ஆனா உங்க பெயர் வராம பாத்துக்கிறீங்க
பகவான் உங்களுக்கு செஞ்சத மறக்காம திருப்பி செய்றீங்க.."
அது சத்தியமாக கடவுளின் வார்த்தை, சிவாஜி கணேசன் எனும் மகா நடிகனின் உளகிடக்கியினை அறிந்த அந்த தெய்வத்தின் வார்த்தை.
சிவாஜி கணேசன் திரும்ப சொன்னார் "வெறும் நாடக நடிகனா ஒரு வேளை சோத்துக்கு நடிச்சிட்டு இருந்த எனக்கு எவ்வளவு பெரும் வாழ்க்கை கொடுத்திருக்கு அந்த தெய்வம்
படிக்காத என்னை, நடிப்பு தவிர தகுதி இல்லாத என்னை டெல்லி அமெரிக்கா மலேஷியா இலங்கைன்னு உலகெமெல்லாம் கொண்டாட வச்ச சக்தி அது
அதுனாலதான் அந்த தெய்வத்தோட கோவில் வாசல்ல நின்னு மக்களை நான் வரவேற்கிறதுக்கு பதிலா யானை கொடுத்தேன்.. இதுல என்ன சாமி இருக்கு?
சிங்கம் நரிகளுடன் வளர்வது போல அவன் திமுகவில் தொடக்கத்தில் இருந்தாலும் பின் வெளிவந்து இந்து தெய்வங்கள், இந்து அரசர்கள், தேசாபிமானிகள் வேடத்தில் மக்களுக்கு எவ்வளவோ உண்மைகளை சொன்னான்
அந்த மகாநடிகன் திமுகவினாலும் காங்கிரசாலும் புறக்கணிக்கபட்டான் எனும் வகையில் இரு கட்சிகளுக்கான ஒற்றுமையினை எளிதாக உணரலாம், இந்துக்கள் அதை உணர்வது சிரமம் அல்ல
அன்று மட்டும் பாஜகவும் மோடியும் இருந்திருந்தால் சிவாஜி பெரும் உயரங்களை எட்டியிருப்பார், அவ்வகையில் இளையராஜா அதிர்ஷ்டசாலி.
No comments:
Post a Comment