ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, 69, தன் உதவியாளரின் வீட்டை, பணத்தை சேமித்து வைக்கும் வங்கியாக பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, சமீபத்தில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது பெண் உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி, 30, வீட்டில், 21 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பார்த்தா சட்டர்ஜி ஏற்கனவே கல்வி அமைச்சராக இருந்தபோது, ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும், அப்போது பெற்ற லஞ்சப் பணத்தை, உதவியாளர் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், அர்பிதா முகர்ஜி அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:என் வீட்டுக்கு வாரத்துக்கு ஒரு முறை அமைச்சர் வருவார். என் வீட்டை வங்கியைப் போல் அவர் பயன்படுத்தினார். வீட்டின் ஒரு அறை முழுதும், பணத்தை பதுக்கி வைத்திருந்தார். அதில், எவ்வளவு பணம் இருந்தது என்ற தகவல் எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment