25 கிலோவிற்கு அதிகமான சிறு மூடைகளாக வாங்கி வந்து அதை சில்லறையாக எடை போட்டு விற்கும் சிறு வியபாரிகள் ஏராளம் இருக்கின்றனர்.
அதில் எங்கேயுமே இந்த வரியால் எந்த பாதிப்பும் கிடையாதே??
இது நமது சிறு வியபாரிகளின் வியபாரத்தை அதிகரிக்க செய்து அவர்கள் வாழ்வாதாரத்தை அதிகரிக்க உதவுமே.
பிறகு எதற்கு மகனுக்கு எம்எல்ஏ சீட் வாங்கிய வக்கிரமராஜா இதை எதிர்க்கின்றார்?
பாமர மக்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லையே.
பாதிக்கப் பட போவது ரிலையன்ஸ், லூலூ
போன்ற பெரும் கார்ப்ரேட் வியபாரம் தானே.
அதற்கு ஏன் இங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கனும்.
பிராண்ட் பெயருடன் பேக்கிங் செய்வது பெரும்பாலும் கார்ப்ரேட்கள் தானே,
அதுவும் ஒழிக்கப் பட வேண்டிய நெகிழிகளில் தானே.
இதில் இங்குள்ளவர்களின் கவலை எதற்கு??
அந்த வரியும் தனிப்பட்ட ஒரு நிதி மந்திரி தீர்மானிப்பது அல்லவே.
நமது பொருளாதார மேதை தமிழக நிதி மந்திரியும், அவரைப் போல அனைத்து மாநில பிரதிநிதிகளும் கலந்து, சேர்ந்து எடுத்த முடிவு தானே.
இந்த விவரம் கூட தெரியாமல் ஒரு தனிப்பட்ட மந்திரியையும், மத்திய அரசையும் விமர்சிப்பது ஏனோ??
அரசியல் சாராமல் சிந்தித்து உண்மைகளை உணர்ந்திடுங்கள்.
கள்ளக்குறிச்சி கலவரக் கும்பலை மறக்க / மறைக்க,
மின்கட்டண உயர்வை பற்றி சிந்திக்காதிருக்க
அவர்களால் இப்படி பாமரர் யாரையும் பாதிக்காத இந்த GST பற்றி பேசி திசை திருப்புகின்றார்களோ ??
No comments:
Post a Comment