Saturday, October 8, 2022

வாலை சுருட்டிக் கொண்டு ஒடுங்கி விடுவர்!

 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' எனப்படும், பி.எப்.ஐ., அமைப்பின் நிர்வாகிகளது வீடுகள் மற்றும் அலுவலகங்களில், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.


பின், அந்த அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையில், என்.ஐ.ஏ., சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் முழு அடைப்பு போராட்டமும், வன்முறையும் நிகழ்ந்தது.


இதனால், கேரள மாநில போக்குவரத்து கழகத்துக்கு, 5.06 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டதாகவும், அதை போராட்டத்தில் ஈடுபட்ட பி.எப்.ஐ., அமைப்பிடம் இருந்து வசூல் செய்து தர வேண்டும் என்றும், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


வழக்கை விசாரித்த நீதிமன்றம், '5.09 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, போக்குவரத்து கழகத்திற்கு பி.எப்.ஐ., அமைப்பு செலுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டதுடன், இழப்பீட்டை செலுத்தும் வரை, வன்முறையில் ஈடுபட்டு கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கப்படாது என்றும் கூறியுள்ளது.



இந்த நெத்தியடி உத்தரவால், நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும், போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட தயங்கும் சூழ்நிலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, ஜாதிய கட்சிகளும், மத ரீதியான கட்சிகளும், அமைப்புகளும், தங்களது செல்வாக்கை காட்ட போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபடுவது குறையவும் வாய்ப்புள்ளது.



latest tamil news


மேலும், போராட்டங்களில் ஈடுபட அரசியல் கட்சியினரும், பிற அமைப்பினரும் அனுமதி கேட்கும் போது, வன்முறை நிகழ்ந்தால், அதனால், அரசு உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கு, கட்சியினர் மற்றும் அமைப்பினர் நிர்வாகிகளே முழு பொறுப்பேற்க வேண்டும்; தண்டம் கட்ட வேண்டும் என, அவர்களிடம் ஒவ்வொரு மாநில போலீசாரும் பிரமாண பத்திரம் எழுதி வாங்க வேண்டும்.



இதைக் கண்டிப்புடன் பின்பற்றினால், வன்முறையில் ஈடுபட நினைப்போர் வாலைச் சுருட்டிக் கொண்டு ஒடுங்கி விடுவர்; பொதுமக்களும் நிம்மதி பெறுவர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...