Friday, October 7, 2022

வெட்டியான வீண் செலவுகளை குறைக்க, இந்த வெள்ளைப் பொருளை உங்கள் தலையை சுற்றி போடுங்கள் போதும். சேமிப்பு பல மடங்கு உயரும்.

 வெட்டி செலவு, தண்ட செலவு, விரைய செலவு என்று நம்முடைய வருமானத்திலிருந்து ஒரு தொகை கண்டிப்பாக செலவாகும். ஏன் தான் அந்த பணம் செலவு ஆனது என்று நமக்கே தெரியாது. ஆனால் கையில் வைத்திருந்த சேமிப்பு அனைத்தும் கரைந்து இருக்கும். உதாரணத்திற்கு மருத்துவ செலவு, வீட்டில் இருக்கும் பொருட்கள் பழுதடைந்திருக்கும். வாகனம் பழுதடைந்திருக்கும். எதிர்பாராத விபத்தின் மூலம் இழப்பு போன்ற நிறைய பொருள் சேதம் இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகளுக்கு நிறைய காசு பணம் செலவாகும். இப்படிப்பட்ட வீண் விரைய செலவுகளை குறைக்க நாம் செய்ய வேண்டிய ஒரு சிறிய பரிகாரத்தை தான் இன்று பார்க்கப் போகின்றோம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு. படிகாரம், மைசூர் பருப்பு. இந்த மைசூர் பருப்பை சிவப்பு பருப்பு என்று சொல்வார்கள் அல்லவா. ஒரு சிகப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய கட்டி படிகாரத் துண்டு வைத்து விடுங்கள். ஒரு கைப்பிடி மைசூர் பருப்பையும் வைத்துவிட்டு, முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை, விரைய செலவு ஆகும் குறிப்பிட்ட அந்த பொருளுக்கு சுற்றி போட வேண்டும்.  உதாரணத்திற்கு உங்க பைக் அடிக்கடி செலவு வைப்பதால், அந்த பைக்கை இந்த சிவப்பு முடிச்சியை கொண்டு சுத்தி போடுங்க. வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லையா. அவர்களுக்கு கிழக்கு பார்த்துவாரு அமர வைத்து அவர்களுடைய தலையை 3 முறை சுற்றி விடுங்கள். உங்களுடைய வீட்டுக்கே நேரம் சரியில்லையா. உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களுமே வீண் விரைய செலவுகளை கொடுக்கிறதா. உங்களுடைய நிலை வாசல் படிக்கு வெளியில் நின்று உங்கள் வீட்டிற்கே திருஷ்டி கழிப்பது போல, இந்த முடிச்சை வைத்து திருஷ்டி கழித்து விடுங்கள். ஒரே முடிச்சு எல்லா பொருட்களுக்கும் சுற்றக்கூடாது. தனித்தனியாக ஒவ்வொரு பொருளுக்கு திருஷ்டி கழிக்க ஒவ்வொரு முடிச்சு தான் தயார் செய்து கொள்ள வேண்டும். திருஷ்டி கழித்த இந்த சிவப்பு முடிச்சு உள்ளே இருக்கும் பொருட்களை என்ன செய்வது. ஓடும் தண்ணீரில் விட வேண்டும். ஆனால் எல்லோருக்கும் அது முடியாது அல்லவா. அதனால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கால் படாத இடத்தில் கொண்டு போய் இந்த இரண்டு பொருட்களையும் போடலாம். வீட்டின் அருகில் ஏதாவது கிணறு இருந்தால் கூட துணியை எடுத்து விட்டு உள்ளே இருக்கும் படிகாரம் பருப்பை மட்டும் அந்த கிணற்றுக்குள் போட்டு விடுங்கள்.  இந்த பரிகாரத்தை எப்போது செய்வது. வாரம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் செய்யலாம். செவ்வாய்க்கிழமையில் செய்யலாம். மாலை நேரத்தில் பரிகாரம் செய்வது சிறப்பு. அப்படி இல்லை என்றால் அமாவாசை தினத்தில் செய்யலாம். மாதம் ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து வந்தால், வீண் விரைய செலவுகள் குறையும். ஒருவேளை கோர்ட்டு கேஸ் வழக்குகளின் மூலம் உங்களுக்கு பிரச்சனை இருந்தால், அந்த டாக்குமெண்ட் இருக்கும் அல்லவா, அதன் மேலே இந்த முடிச்சை ஒரு நாள் இரவு வைத்துவிட்டு, மறுநாள் அந்த முடிச்சை எடுத்து போட்டு விடுங்கள். கோர்ட்டு கேஸ் வழக்குகள் ஒரு முடிவுக்கு நிச்சயம் வரும்.   இந்த ஆலமர வேர் எங்கு கிடைத்தாலும் மறக்காமல் எடுத்து வந்து, உங்கள் வீட்டு பூஜையில் வைத்து இந்த முறையில் பூஜை செய்தால் நீங்கள் செல்வந்தராகும் யோகம் உங்களை தேடி வரும் அவ்வளவு தாங்க. இது ஒரு சிறிய பரிகாரமாக இருந்தாலும் நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயமாக கை மேல் நல்ல பலன் கிடைக்கும். உங்களை பிடித்த கண் திருஷ்டியை நீக்குவதற்கு இந்த படிகாரம் உதவியாக இருக்கும். அதே சமயம் இந்த சிவப்பு பருப்பு வீண் விரயத்தை குறைத்து சேமிப்பை அதிகரிக்கச் செய்யும். இதுதான் இந்த பரிகாரத்தின் சூட்சமம். (கல்யாணத்திற்கு செலவு, துணிமணி எடுப்பதில் செலவு, போன்ற விஷயங்கள் வீண் விரயத்தில் வராது. அது எல்லாம் சுப செலவுகள்.)  உங்களுக்கு இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...