Friday, October 7, 2022

ஆனது ...

 #நட்பு உடைந்து முகநூலானது ...


#சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ...


#வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ...


#உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ...


#குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ...


#நெற்களம் உடைந்து கட்டடமானது ...


#காலநிலை உடைந்து வெப்ப மயமானது ...


#வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ...


#துணிப்பை உடைந்து நெகிழியானது ...


#அங்காடி உடைந்து அமேசான் ஆனது ...


#விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ...


#ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ...


#கடிதம் உடைந்து இமெயிலானது ...


#விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது ...


#புத்தகம் உடைந்து  இ-புக் ஆனது ...


#சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது...


#இட்லி உடைந்து பர்கர் ஆனது ...


#தோசை உடைந்து பிட்சாவானது ...


#குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ...


#பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ...


#வெற்றிலை உடைந்து பீடாவானது ...


#தொலைபேசி உடைந்து கைபேசியானது ...


#வங்கி உடைந்து பே டி எம் ஆனது ...


#நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ...


#புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ...


#மனிதம் உடைந்து மதவெறியானது ...


#அரசியல் உடைந்து அருவெறுப்பானது ...


#பொதுநலம் உடைந்து சுயநலமானது ...


#பொறுமை உடைந்து அவசரமானது ...


#ஊடல் உடைந்து விவாகரத்தானது ...


#காதல் உடைந்து காமமாய்ப் போனது ...


#நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால் உடைவது உலகினில் நிரந்தரமானது ..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...