வளவனுார் போலீஸ் நிலையத்தில் ஏ.டி.எஸ்.பி.,யிடம் தி.மு.க., ஒன்றிய சேர்மன் வாக்குவாதத்தில் ஈடுபடும் 'வீடியோ' வைரலாகி வருகிறது.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் அண்ணாதுரை சிலை கடந்த செப்டம்பர் 26ம் தேதி அவமதிப்பு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களை விடுவித்ததாக, தி.மு.க.,வை சேர்ந்த கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், வளவனுார் போலீஸ் நிலையத்தில் ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
No comments:
Post a Comment