கொடீசியாவில் நடந்த விழாவில் சிபிஆர் வானதியம்மாவிற்கு அறிவுரை கூறிய வீடியோவை காண நேர்ந்தது. பார்க்கும் போதே 'அட வெட்கம் கெட்டவனே' ன்னு தான் வார்த்தைகள் வந்தது.
கணேசனார் கூட குடும்ப விழாவிற்கு மம்தா, ஸ்டாலின் என பலரையும் அழைத்து 'உங்கள் அன்பிற்கு நான் கட்டுப்பட்டவன்' என்று காட்டி கொண்டார்.
முக்கியமானவங்கன்னு நெனச்சிட்டிருந்த பலரும் கட்சியை உயர்த்தி பிடிச்சிருப்பாங்கன்னு பார்த்தால், கட்சியோட கழுத்தை இறுக்கி பிடிச்சிட்டு தொங்கிட்டு இருந்திருக்காங்க.
அப்புறம் எங்கிட்டிருந்து கட்சி வளர்ந்திருக்கும்?
கவுரவமான பதவிகளை பெற்ற பிறகும், இவங்களோட நேசத்தின் எல்லைகளை தெரிந்து கொள்ளும் போது தான் பாவப்பட்ட தொண்டர்களின் நிலை மனதுக்குள் வந்து போகிறது.
தூண்கள் என நினைத்தவர்களே, கட்சியை தொங்கலில் தான் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் போது தான், கட்சி நோட்டாவை கூட ஏன் தாண்டவில்லை என்று தெரிகிறது.
இந்த கண்றாவியில்
கனத்த இதயத்துடன் ...
பனித்த விழிகளுடன்... என்று புலம்பி சென்றவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் யோசிக்க வேண்டி வருகிறது.
எல்லாரோடேயும் நெருக்கமாக இருந்து கொண்டு
சொந்த கட்சியை டிஸ்டன்ஸ்ல வச்சிகிட்டு
வெள்ளையும் சொல்லையுமா திரியறவங்கல்லாம்
நாங்களும் பெரிய மனுசங்கன்னு ஊருக்குள்ளார சொல்லிட்டு திரியாம
தயவுசெய்து வெளியே போயிருங்கடா, உங்களுக்கு புண்ணியமாக போயிரும்.
கட்சிய உசிருக்கு மேல நினைச்சிட்டு இருக்கற பல லட்சம் தொண்டர்கள் இன்னும் இருக்காங்க, அவங்க போதும் எங்க கட்சிக்கு.
டேய் சேகரு...
கருமாந்திரம் புடிச்சவனே ...
உன்னையெல்லாம் பத்தி பேசவே கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். கடைசியில உன்னயும் கிழிக்க வேண்டிய கட்டாயத்த உருவாக்கிட்டியேடா.
அண்ணாமலை ஆட்டத்துல மெயின் ப்ளேயர்களே மூச்சு திணறி உக்காந்திட்டு இருக்கும் போது, ஒப்புக்கு சப்பாணி நீ எதுக்குடா கூவினேகிற?
அண்ணாமலை தலைமையில் களம் மாறிகிட்டே இருக்கு.
பொறுப்பை உணர்ந்து வேலை பாக்கறவங்களுக்கு, எதிர்காலத்தில் பொறுப்பான பதவிகளும் காத்திட்டு இருக்கு.
வருங்கால தமிழக பாஜக எம்பி, அமைச்சர், எம்எல்ஏக்கள் எல்லோரும் அவங்கவங்க தொகுதியில் நிறைவாக பணியாற்றி வாருங்கள். காலம் நிச்சயமாக உங்களையும் அரியணையில் ஏற்றி வைக்கும்.
No comments:
Post a Comment