Wednesday, July 12, 2023

இயக்குனர் விக்ரமன்.

 இவர் பார்த்திபனின் உதவியாளராக இருந்து பின் RB சௌத்ரி மூலம் புதுவசந்தம் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றார்

அனேகமாக குறைந்த செலவில் அறிமுக இயக்குனர் படம் மூலம் எடுக்கும் சூப்பர் குட் பிலிம் பாணி இவரிலிருந்த்துதன் ஆரம்பம் ஆனது
நாயகன் நாயகி மிகவும் எளிமையானவர்களாக நம்மிடையேஉலவும் கதா பாத்திரங்களாக அமைத்திருப்பார் அதனால் நன்கு எடுபட்டது
மற்றவர்கள் விளம்பரத்திற்கு செலவு செய்யும் பணத்தில் இவர் படமே எடுத்து விடுவர் என்ற லோ பட்ஜெட் .
நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களை வைத்து பெரிய வெற்றி படம் கொடுத்தவர் காரணம் கதையில் எளிமை
பீல் குட் என்ற வகையில் வில்லனே இல்லாத சூழ்நிலைகள்தான் வில்லன் என்பது போன்ற இவரது படங்கள் ஆரம்பத்தில் சற்று வெளிச்சத்திற்கு வந்தன பூவே உனக்காக படம் விஜய்க்கு ஒரு முகவரி தந்தது . சிதாரா ஆனந்த் பாபு, சார்லி, முரளி போன்றோர் இவரால் ஒரு ஏற்றம் பெற்றனர் எனலாம்
இவர் படத்தில் ஒரு பெண் எங்கிருந்தோ வந்து ஒரு குடும்பம் அல்லது கூட்டத்திற்கு தாமாக முன்வந்து நல்லது செய்வாள் பிறகு அவளுக்கு ஒரு பின்னணி கதை இருக்கும் இது புதுவசந்தம், கோகுலம், பூவே உனக்காக எல்லாவற்றிலும் திகட்ட திகட்ட இடம் பெற்றது
விஜய்க்கு பூவே உனக்காக போல சரத்குமாருக்கு சூரிய வம்சம், கார்த்திக்குக்கு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சூர்யாவிற்கு உன்னை நினைத்து விஜயகாந்திற்கு வானத்தை போல போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் தெலுங்கில் முகவரிஇல்லாமல் இருந்த விக்ரமை வைத்து puthiya மன்னர்கள் எடுத்தார் கதை விறுவிறுப்பாக இருந்தும்ம் பெரிய வெற்றி பெறவில்லை ஆனால் இங்கு விக்ரமை ஒரு நடிகராக ஏற்று கொண்டது .
பரத்தை வைத்து இயக்கிய சென்னை காதல் இவர் பார்முலா இல்லதாதாலோ என்னவோ பெரும் தோல்வியை சந்தித்தது
திரைக்கதை அமைப்பதில் பெரிய அளவு சோபிக்க வில்லை எல்லோரும் செய்வது போல் கதை விவாதம் இவர் செய்ய மாட்டரோ என்று ஐயம் எழுவது போல் காட்சிகளும் , உத்திகளும் மிக சாதரணமாக ஒரே போன்று இருக்கும் இது மிக பெரிய குறை
அழகான கதையை தூக்கி நிறுத்தும் அற்புதமான காட்சிகள் மிக பஞ்சமாக இருக்கும் . இவர் படத்தில் , பாடல்களிலும் ஒரு ஸ்டீரியோ டைப் வைத்து வித்தியாசம் இல்லாமல் செய்திருப்பார் .
ரொம்ப பாசிடிவ் காட்சிகள் வைத்து நடைமுறையில் இருந்து விலகி ஒரு சின்தரல்லா தேவதை கதைபோல் அமைத்து அதை குழந்தைகளுக்கான படம் போல் அமைத்து விடுவது பெரும் குறை
ஆபாச காட்சிகளோ ரத்தம் வழியும் சண்டை காட்சிகளோ இல்லாமல் ஒருபடத்தை யோசிப்பதும் சவால்தான் அதை இவர் சாதரணமாக செய்வது பெரிய விசயம்தான்
சில ACTION படங்களும் முயற்சித்து இவருக்கு கைவரவில்லை ( பெரும் புள்ளி, சென்னைக்காதல் )
ஆனாலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது பத்தோடு பதினொன்னு என்று தன்னை சுருக்கிகொண்டது புரியாத புதிர்தான்.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...