Saturday, October 21, 2023

*B 777 மோடிக்கு சொந்தமான விமானமா? உண்மை என்ன ?*

 *உண்மையில் இது காங்கிரஸ், ராகுல் காந்திக்காக வாங்குவதற்கு அவர் அம்மா சோனியா அவர்களால் ஒப்பந்தம் செய்யப்பட்டதே...*

1987-ல் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது வித்தியாசமான ஒரு இடத்திற்கு 10 நாட்கள் சுற்றுலா செல்ல...
ராஜிவ் காந்தி குடும்பம் முடிவு செய்து...
லட்சத்தீவுக்கு அருகில் உள்ள 'பங்காராம்' என்ற தீவை தேர்ந்தெடுத்தார்கள்.
காரணம் அந்தத் தீவில் மட்டும்தான் விசா இல்லாமல் வெளிநாட்டினருக்கும் அனுமதி உண்டு.
யாரெல்லாம் தெரியுமா ?
ராஜிவ் காந்தி,
சோனியா,
ராகுல்,
பிரியங்கா,
ராஜிவ் காந்தியின் மாமியார்,
மச்சான்,
மச்சினி,
மச்சானின் மனைவி,
மச்சினிச்சியின் கணவர்,
பாலிவுட் அமிதாப் பச்சன்,
ஜெயா பச்சன்,
அபிஷேக் பச்சன்
அமிதாப்பின் மகள் அடங்கிய பட்டாளம்.
பங்காராம் தீவுக்கு செல்ல பயன்படுத்தப் பட்ட வாகனம் எது தெரியுமா ?
இந்திய கடற்படையைச் சேர்ந்த விமானம் தாங்கி கப்பல் (Premier warship)
*INS VIRAT*
என்ற
*Most Prestigious War Ship.*
இந்த கப்பலை தான் ஓலா டாக்ஸி போல பயன் படுத்தினார்கள்.
பொதுவாக,
இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பலில் வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை.
இரண்டாவதாக மாலை 6 மணிக்கு மேல் பெண்களுக்கு அனுமதி கிடையாது.
ஆனால்,
தன்னுடைய பதவியை மிகவும் மோசமான வகையில் துஷ்பிரயோகம் செய்து...
இந்திய கடற்படையின் கௌரவத்தை சர்வதேச அளவில் நிலைநாட்டும் அளவில் உள்ள ஒரு 'விமானம் தாங்கி கப்பலை...'
ஒரு சாதாரண டாக்ஸி போலவும்,
கப்பலின் சீனியர் மோஸ்ட் கேப்டனை ஒரு டாக்ஸி டிரைவர் போலவும்...
அப்போதைய பிரதமர் நடத்தியது முப்படைகளிடையே ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
*ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு பெருத்த அவமரியாதையை* ஏற்படுத்தி விட்டார் ராஜிவ் காந்தி.
மேலும் இது,
*சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானதும் கூட.*
பிரதமர் குடும்பம் மற்றும் குடும்ப நண்பர்கள் தீவில் தங்கிய 10 நாட்களும்...
அந்த விமானம் தாங்கி கப்பல் நாட்டின் பாதுகாப்பு பணிகளையும்,
*நேவல் எக்ஸ்ர்ஸைஸ்*
போன்ற முக்கியமான பணிகளையும் செய்யாமல் 'பங்காராம் தீவை' சுற்றியே வந்தது.
அதுமட்டுமல்லாமல்...
விமானம் தாங்கி கப்பலில் உள்ள ஹெலிகாப்டர் ...
24 மணி நேரமும் தீவைச்சுற்றி வர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
ஒரு விமானம் தாங்கி கப்பலில் ஏகப்பட்ட மாலுமிகள்,
குறைந்தது 75 கமிஷன்ட் ஆஃபீஸ்ர்கள் இருப்பார்கள்.
ஒருநாளைக்கு கப்பலுக்கு செலவாகும் எரி பொருள், மற்ற எல்லாம சேர்த்து லட்சக்கணக்கில் செலவாகும்.
மேலும் பேட்ரோல் பணியில் உள்ள ஹெலிகாப்டர்க்கு ஆகும் அவிஷன் பியூலும் மிகவும் விலை உயர்ந்தது.
அது மட்டுமா..?
ராஜிவ் காந்தி குடும்பம் அந்த தீவுக்கு சென்றிருந்த சமயம் ஓணம் பண்டிகை குறுக்கிட்டது.
அப்போது கேரள முதல்வராக இருந்த K கருணாகரன் பிரதமர் குடும்பத்திற்காக குருவாயூரப்பன் கோவிலில்...
‘ஓணப் பாயாசம்’ பிரசாதம் தயாரிக்கச் சொல்லி...
சுமார் 50 லிட்டர் குருவாயூரப்பன் பிரசாதமான ஓணப்பாயசத்தை தானே குருவாயூர் கோவிலிக்குச் சென்று...
வாங்கிஅதை எடுத்துக் கொண்டு,
ஒரு ஹெலிகாப்டரில் லட்சத்தீவுக்குச் சென்று...
எல்லோருக்கும் விநியோகம் செய்தார்.
இவ்வாறாக,
கூத்து, கும்மாளம் அடிக்கவும்...
அந்நிய நாடுகளில் சொத்து சேர்க்கவும்...
நமது நாட்டை அடமானம் வைத்த கும்பல் தானே இந்த நேரு குடும்பம்.
இவர்கள் தான் இன்று
'ஊருக்கு உபதேசம்' செய்கிறார்கள்.
இந்தியாவிற்குப் புதிதாக வருகை தந்துள்ள *B 777* என்ற *அதிநவீன VVIP விமானம்* பற்றி
சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள்.
அதாவது இவ்வளவு சொகுசு விமானத்தில் மோடி பிரயாணம் செய்ய வேண்டுமா ?
விமானத்தில் சொகுசான படுக்கை அறைகள் அவசியமா ?
அண்ணனும், தங்கையும் சேர்ந்து வயிற்றெரிச்சல் காரணமாக இருவரும் ‘கோரஸ்’ ஆக கூச்சலிடுகிறார்கள்.
இந்த நவீன விமானம் இப்போது வந்தது என்றாலும்...
2012 ல் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே இதனை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது.
தனக்குப் பின் தன் சீமந்திர புத்திரன்தானே அரியாசனத்தில் அமரப்போகிறான் என்ற நப்பாசையில்
இத்தாலி அம்மையாரின் கண்ணசைவில் கையெழுத்து இடப்பட்டது.
'மோடி பிரதமர் ஆவார்' என இவர்கள் கனவு கூட கண்டிருக்க வில்லை.
'இப்போது இந்தியக் குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்காக உபயோகிக்கப்படுகிறது'
அதனால் தான் இவர்கள் கும்பி பற்றி எரிகிறது.
இவர்கள்,
இது வரை இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததோடு மட்டுமல்லாமல்
வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்தவர்கள்தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...