பூணூலில் இருக்கும் மூன்று புரிகள்., காயத்ரீ (மனம்)., சரஸ்வதி (வாக்கு)., சாவித்திரி (செய்கை) தேவியரைக் குறிக்கும். இதன் மூலம் பூணூலை அணிபவா் மனம்., வாக்கு மற்றும் செய்கையில் தூய்மையுடன் இருக்க எந்நேரமும் நினைவுறுத்தப்படுகிறாா்.
பூணுல் ஏன் இடது தோளில் அணிகிறோம்.? பூணுல் ஏன் மூன்று பிரியாக இருக்கிறது..?
இடது தோளில் பூணுல் அணிய வேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. எப்போதும் பூணுல் இடது தோளில் இருக்க வேண்டும். இடது தோளில் பூணுல் இருக்கும்போது அதற்கு உபவீதி என்று சிறப்புப் பெயர்.
நம் முன்னோர்களை ஆராதிக்கும் போது பூணுல் வலது தோளில் இருக்க வேண்டும். ரிஷிகளை வழிபடும் வேளையில் இரு தோளிலுமாக தொங்க வேண்டும். அதாவது மாலை போல அணிய வேண்டும். முத்தொழிலின் வெளிப்பாடு முப்பிரி.
மூன்று ஆச்ரமங்களுக்கும் அது தேவை.
காலம் மூன்று. மூர்த்திகள் மூன்று.
பூணுலின் பிரிவுகளும் மூன்று.
மூன்று எண்ணிக்கை முற்று பெற்றதாக கூறப்படுகிறது. ஏலத்தில் மூன்று முறை அழைப்பாா்கள். நீதி மன்றத்திலும் மூன்று முறை அழைப்பாா்கள். அது முற்று பெற்றதாக கருதுகிறோம்.
பூணுல் பரமாத்மா வடிவம் (யஞ்ஜாக்ய பரமாத்மாய). பரமாத்மா மூன்று கால்களோடு எழும்பினார் (த்ரீபாத் ஊர்தவ) மூன்று அடி அளந்தவா். அப்போது முற்றுப் பெற்றது. தேவா்கள்., ரிஷிகள்., முன்னோர்கள் இம்மூவருக்கும் தினமும் பணிவிடை செய்ய வேண்டும். அதாவது நமக்கெல்லாம் நித்யப்படி (தினமும்) 3 விதமான கடன்கள் (வேலைகள்) உள்ளன்.
01. ஆத்ம கடன்.,
02. பித்ரு கடன்.,
03. தேவ கடன்.
அதற்கு ஆதாரமான பூணுலும் மூன்று பிரியாக இருப்பது பொருந்தும்.
01. *ஆத்ம கடன்*
நாம் தினமும் செய்ய வேண்டியவை., அனுஷ்டானங்கள் ~ உடல் சுத்தி (நம் உடலை சுத்தப்படுத்துவது)., மன சுத்தி (மனதை சத்தம் படுத்த சந்தியாவந்தனம்., ஹௌபாஸனம் செய்வது (!!)., நித்யப்படி பூஜை செய்வது.
02. *பித்ரு கடன்*
தாய்., தந்தையருக்கு *(உயிருடன் இருக்கம் பொழுது)* சேவை செய்வது., சொல் கேட்டு நடப்பது., அவா்கள் காலம் முடிந்தவுடன் அவா்களுக்கு செய்ய வேண்டிய நம்முடைய கா்மாக்களை முறைப்படி செய்வது. முன்னோர்களுக்கு தா்ப்பணம் / திதி கொடுக்க வேண்டிய தினங்களில் கொடுப்பது.
03. *தேவ கடன்*
நம்முடைய தினசாி பூஜைகளை தவிர விஷேச பூஜைகள்., ஹோமங்கள்., முதலியன செய்வது., ஊர் கோவில்களில் கைங்கா்யம் செய்வது.
நாம் ஆராதிக்கும் காயத்ரீ மூன்றடிகளோடு விளங்குபவள். அவளை மூன்று வேளையும் வழிபட வேண்டும். அதற்கு காரணமாக பூணுலும் மூன்று பிரியாக வந்தது சிறப்பு.
No comments:
Post a Comment