Monday, December 16, 2019

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. சி. வி. சண்முகம் அவர்கள் ஸ்டாலினை விளாசல் !!.

நான்கு வார்த்தையை தெளிவாக பேச வக்கில்லாத திராணி இல்லாத எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு என்னைப் பற்றி விமர்சிக்க தகுதியும், தராதரமும் இல்லை.
திமுக தலைவர், எதிர்கட்சி தலைவர் என்ற பொறுப்புடன் பேச வேண்டும்.
ஒரு அமைச்சராக எனது நிர்வாகத் திறனை நீங்கள் விமர்சிக்கலாம். ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யும் ஸ்டாலினுக்கு தகுதியில்லை, நாவடக்கம் தேவை.
ஊர் பேர் தெரியாத என்று என்னை விமர்சிக்கும் ஸ்டாலின் எங்கிருந்து வந்தார்,
கருணாநிதி எங்கிருந்து வந்தார் , பூர்வீகம் என்ன என்று தைரியமாக சொல்ல முடியுமா ?
உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுகவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்தலாம் என தெளிவாக தீர்ப்பை வழங்கியுள்ளது.
தேர்தலை சந்திக்க தைரியமில்லாமல் திமுக தலைவர் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தும் வகையில் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தேர்தலை நிறுத்த வேண்டும் சீர்குலைக்கும் வகையில் திமுக தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தி வருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...