Saturday, December 5, 2020

அந்த கழிசடைக்கு முக்கியத்துவம் கொடுக்க த் தேவையில்லை என்பது தாழ்மையான கருத்து 🙏

 ரொம்ப போராடிச்சு "மூக்குத்தி அம்மன்" பார்த்தேன்.

அந்த காலத்து பாலசந்தர் படமான அரங்கேற்றம் நினைவுக்கு வந்தது!
ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை அழுத்தமாக சொல்ல சினிமாகாரர்கள் நிரம்ப மிகைப்படுத்தி காட்சிகளை கதைகளை எடுத்து செல்வார்கள்.
அந்த உத்தியில் ஒரு ஏழை பெண் கெடுகிறாள் என்பதை இன்னமும் அழத்தமாக காட்ட அவளை ஆசாரம் மிக்க பிராமண பெண்ணாக "தைரியமாக" காட்டிய புலி பாலச்சந்தர். இதை இந்த பிராமண கும்பலும் கைதட்டி கண்ணீர் சிந்தி ரசித்தது.
ஏன்.. மற்ற சாதிப் பெண்கள் வாழ்க்கையில் இப்படி தவறுவது அதிசயமில்லையா? பரிதாப்பட வேண்டியதில்லையா?
உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும்? அத்தகைய பிரச்சனையை ஒரு ஜாதி சார்பில்லாத பெண்ணுக்கு நடந்ததாக காட்டியிருக்க வேண்டும்.
மனதில் உறுதி வேண்டும் மற்றும் அவள் ஒரு தொடர்கதையை காட்டியது போல சொல்லியிருக்கலாம். ஆனால் அன்றைய பாலசந்தருக்கு இன்றைய மணி ரத்தினம் போல ஒரு ஷாக் வேல்யூ தேவைப் பட்டது. வேறு எந்த ஜாதியை யாவது மறைமுகமாக காட்டினால் கூட இவரை இவரது அலுவலகத்திலேயே வெட்டுவார்கள்.
அதனால் சொந்த ஜாதி பற்றி சொன்னால் அதுவும் பிரச்சனை என்று சொன்னால் பதறிப் போய் விலகி போகும் ஜாதி என்று தெரிந்து கையை வைத்தார் பாலசந்தர். மேதை அல்லவா !!
இவர்களின் வீரம் அவ்வளவு தான் !!
அதே பாணியில் ஆர்.ஜே.பாலாஜி தன் சமூக பார்வையின் கோளாரை தன் சொந்த மதத்தின் ஊடாக மிகவும் குழந்தை தானமாக சொல்லி காசு பார்த்து விட்டார். காசு கொடுத்தால் தானே முதுகில் சாட்டையால் அடித்துக் கொள்ளும் பிச்சைக்காரனை விட கேவலம் இவர்கள். அவர்களாவது தன்னை மட்டுமே வருத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்த பாலாஜி போன்றவர்கள் காசுக்காக தன் கூட்டத்தையே கேவலப் படுத்துகிறார்.
இந்து கடவுள்களுக்கு எதிராக மட்டுமே இந்த கிண்டல் கூத்தஎல்லாம் செய்து உங்களால் உயிருடன் நடமாட முடியும். மற்றவர்களின் பேரை சொல்லவே கழிவீர்கள்.
கிறிஸ்துவ மத போதகர்களை கிண்டல் செய்து வந்த
TRANS இன்றுவரை தமிழில் டப் செய்யப் பட்டோ மறு உருவாக்கம் செய்யப் பட்டோ வரவில்லை தெரியுமா?
அந்த படம் எடுத்தவர் மிகவும் திறம்பட ஏசுவின் பக்கமே செல்லாமல் ஏசுவின் வார்த்தைகளை கதைகளை கிண்டல் செய்யாமல் அந்த பெயரை வைத்து காசு பண்ணும் கூட்டத்தின் மீது மட்டும் அழகாக கதை சொன்னான். அதை பார்பவர்களுக்கும் அந்த போலி பாதிரிகள் மீது மட்டும்தான் கோபம் வரும்.
ஆனால் பாலாஜி அதை செய்தானா? அம்மனுக்கு வெங்கடாசலபதி மீது கோபம் வருதாம்.
உனக்கு எனக்கும் தான் பொருத்தம் பாட்டுக்கு சாமி வருதாம். கண்றாவி.
ஆர். ஜெ. பாலாஜியின் குருவி மூளை தெரிந்தது.
இந்து சாமிகளை சாமியார்களை வைத்து எத்தனையோ பேர் சம்பாதித்து விட்டனர்.
எத்தனையோ போலி சாமியார்களை போல பாலாஜியும் ஒரு அரை வேக்காடு பஹுத்தறிவு.
ஆனா பாலாஜி ஒன்றை மறந்து விட்டார்.
கர்மா விடாது !!
Image may contain: 1 person, eyeglasses and closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...