Friday, July 15, 2022

‘வாழ்க்கையில் வெற்றி பெறுவது‘?

 தடை உத்தரவை மீறி, போலி ஆவணங்கள் வாயிலாக, பி.ஏ.சி.எல்., என்ற நிறுவனத்தின் 5,300 ஏக்கர் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு, பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பதிவுத்துறை உயரதிகாரிகள் துணையுடன், இந்த மோசடி அரங்கேறியுள்ளது.

 தடை  மீறி , நிலம் விற்பனை :பதிவுத் துறை, பகீர்


பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பால் வியாபாரி நிர்மல் சிங் பான்கூ. இவர், தன் குடும்பத்தினருடன் இணைந்து, 'பியர்ல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேஷன் லிமிடெட்' என்ற பி.ஏ.சி.எல்., நிறுவனத்தை 1996 முதல் நடத்தி வந்தார்.ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வந்த இந்நிறுவனம், பொது மக்களிடம் முதலீடுகளை திரட்டி, ரியல் எஸ்டேட், வேளாண் சார்ந்த தொழில்களில் பயன்படுத்தி வந்தது.பொதுமக்களிடம் நிதி திரட்டி, சட்டவிரோதமாக அசையா சொத்துகளை குவித்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், பி.ஏ.சி.எல்., நிறுவனம் மீது புகார் எழுந்தது. இது குறித்து, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.


லோதா கமிட்டி



இந்நிறுவன சொத்துக்களை கண்காணிக்க, 2016ல் நீதிபதி லோதா கமிட்டியை உச்ச நீதிமன்றம் நியமித்தது. பி.ஏ.சி.எல்., சொத்து விபரங்கள் ஆய்வில் உள்ள நிலையில், இச்சொத்துக்கள் தொடர்பான விற்பனையை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நீதிபதிலோதா கமிட்டி அளித்த தடையின்மை சான்று என்று, ஒரு போலி ஆவணத்தை உருவாக்கி, தமிழகத்தின் சில பகுதிகளில் பி.ஏ.சி.எல்., சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.இவ்வாறு தடையின்மை சான்று இருக்கிறது என்று கூறி, விற்பனையை பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சில மாதங்களுக்கு முன் பதிவுத்துறை எச்சரித்தது.அதையும் மீறி, 'தடை ஆணைக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பத்திரம்' என்று கூறி, மோசடி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


முறைகேடு



இந்நிலையில், 2016 முதல் தற்போது வரை, தமிழகத்தில் துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், பி.ஏ.சி.எல்., நிறுவனத்தின், 5,300 ஏக்கர் நிலங்கள் விற்பனை தொடர்பாக, 237 பத்திரங்கள், முறைகேடாக பதிவாகி உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.
இதில், பல ஆயிரம் கோடிக்கு மோசடி நடந்துள்ளது. பதிவுத்துறை தலைவர் தடையை மீறி, குறிப்பிட்ட சில கூடுதல் ஐ.ஜி.,க்கள் துணையுடன், சார் - பதிவாளர்கள் இந்த பத்திரங்களை பதிவு
செய்ததாக கூறப்படுகிறது.இந்த பத்திரங்களை ரத்து செய்வதுடன், இதில் சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள் உள்ளிட்ட பதிவுத்துறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...