ஓஷோவின் குட்டிகதை :--
' நாடன் என்பவன் இஸ்ரேலில் இருந்து
' பாரீஸ் 'க்கு ஒரு வேலை நிமித்தமாக வந்தான்.
தனது வேலை முடிந்ததும்,
' குளோரியா '
என்றப் பெண்ணைத் தேடி,
பாரீஸ் ஸில் அவள் தங்கியிருக்கும் கல்லூரி விடுதிக்கு சென்றான்.
அவளை, நாடன் இதற்கு முன் பார்த்ததில்லை.
ஆனால்,
அவளிடம் அவனுக்கு ஒரு சின்ன வேலை இருந்தது.
அவள் அங்குள்ள ' சிகப்பு விளக்கு ' பகுதிக்கு சென்றிருப்பதாகவும்,
மறு நாள் காலையில்தான்
அவளை விடுதியில் பார்க்க முடியும் என்று, விடுதியில் உள்ளவர்கள் மூலமாக
கேள்வி பட்டு,
நாடன்,
அவளைத் தேடி சிகப்பு விளக்கு பகுதிக்கு சென்றான்.
அங்கு ஆண், பெண் என்று
ஜோடி ஜோடியாக ஒரே கூட்டம்.
' குளோரியா 'வை எப்படி கண்டு பிடிப்பது
என்றும் தெரிய வில்லை.
வரவேற்பறையில் கேட்டதற்கும் முறையான பதில் இல்லை.
நாடன்,
ஆயிரம் டாலரை கையில் வைத்துக் கொண்டான். வேகமாக கத்தினான்.
' ஆயிரம் டாலர் தருகிறேன். எனக்கு விடுதியில் தங்கியிருக்கும் குளோரியா என்றப் பெண் வேண்டும் '
ஐந்து நிமிட நிசப்தத்திற்கு பின்,
குளோரியா அவனிடம் வந்தாள்.
அவளது இளமையையும், உடல் அழகையும் பார்த்த நாடன் வாயடைத்து
நின்றான்.
அவளைத் தேடி வந்த உண்மையான காரணத்தை
அவளது அழகில் மயங்கி
அவளிடம் சொல்ல மறந்து போனான்.
அவ்வளவு அழகாகவும் இளமையாகவும் இருந்தாள் அவள்.
நாடனிடம் வந்த குளோரியா, எதுவும் பேசாமல் அவனை அழைத்துக் கோண்டு தனது அறைக்குள் போய் விட்டாள்.
ஆயிரம் டாலர் என்பது எந்தப் பெண்ணிற்கும் அதிக விலை.
அந்த இரவு குளோரியாவுடன்
மிக இன்பமாக கழிந்தது நாடனுக்கு.
ஆயிரம் டாலரை அவளிடம் கொடுத்துவிட்டு,
மீண்டும் நாளைக்கு ஆயிரம் டாலருடன் வருவதாக அவளிடம் சொல்லி விட்டுப் போனான்.
சொன்னது போலவே அடுத்த நாள் வந்து
ஆயிரம் டாலர் கொடுத்துவிட்டு,
இன்பமாக தங்கினான்.
மூன்றாவது நாளும் இதுபோலவே தங்கி
ஆயிரம் டாலரை குளோரியாவிற்கு கொடுத்தான்.
இந்த முறை, ஆச்சர்யம் தாங்காத குளோரியா நாடனிடம்,
' எதற்காக இவ்வளவு அதிகமான
பணம் கொடுத்து என்னையே கூப்பிடுகிறீர்கள் ? '
என்று கேட்டாள்.
அதற்கு நாடன்,
' நான் இஸ்ரேலில் இருந்து வருகிறேன்.'
என்றான்.
ஆச்சர்யம் அடைந்த குளோரியா,
' அப்படியா !
நானும் இஸ்ரேலிலிருந்துதான்
பாரீஸ் ஸுக்கு படிக்க வந்திருக்கிறேன்.'
என்றாள்.
நாடன் அமைதியாக சொன்னான்.
' அது எனக்குத் தெரியும்.
நான் உன்னைப் பார்த்ததில்லை.
ஆனால்,
இஸ்ரேலில் நாங்கள் வசிக்கும் அதே தெருவில்தான்,
உனது பாட்டியும் வசிக்கிறார்கள்.
நான் பாரீஸ் வருவதை கேள்வி பட்டதும்
உனது பாட்டி தான் என்னிடம் வந்து
மூவாயிரம் டாலரைக் கொடுத்து
அதை உன்னிடம் கொடுக்க சொன்னார்கள்.
அந்தப் பணம்தான்,
நான் உன்னிடம் மூன்று நாட்களாக கொடுத்தது '
No comments:
Post a Comment