குதிரையை விட வேகமாக ஓடி அடித்துத் தின்னும் வலிமை படைத்த புலி, சிங்கம் ஆகிய வலிமையான விலங்குகள் பெயரில் திறன் அலகு தீர்மானிப்பதுதானே இயல்பாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் சிறுத்தைகள் ஒரு மணிக்கு 74 மைல் வேகத்தில் ஓடும்!
ஏன் இவற்றை எல்லாம் விட்டுவிட்டு குதிரைத் திறன்( Horse power) என்று சொன்னார்கள்? குதிரையை விட வேகமாக ஓடும் மான்கள் இருக்க, குதிரையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
சிங்கம், புலி, சிறுத்தை, மான் போன்ற விலங்குகள் சில நிமிடங்களிலேயே சோர்வடைந்து வேகம் குறைந்து நின்று விடும். அவைகளுக்கு ஓட்டத்தை வெகுநேரம் தாக்குப் பிடிக்கும் திறன் Stamina இல்லை. குறுகிய தூரத்துக்குள் அடிக்க இயலவில்லை என்றால் இவற்றின் இரை விலங்குகள் தப்பித்து விடும்.
மாறாக, மற்ற எல்லா விலங்குகளிடம் இல்லாத ஒரு திறன் குதிரைகளிடம் உண்டு. சீராக ஒரே வேகத்தில் நீண்ட நேரம் ஓடக் கூடிய திறன் குதிரைக்கு மட்டுமே உண்டு. வெகு நேரம் தாக்குப் பிடிக்கும் திறனில் குதிரைக்கு இணையான விலங்குகள் இப்புவியில் இல்லை.
எனவேதான் குதிரைத் திறன் அலகாகக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment