ரம்புட்டான் பழ மரத்தை, வணிக ரீதியாக நட்டு பலன் பெற்று வரும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ்: ரம்புட்டான் மர செடியை வளர்க்க, நல்ல வெளிச்சம் உள்ள இடமாக தேர்வு செய்ய வேண்டும். சூரிய வெளிச்சம், இந்த மரத்திற்கு அதிகம் தேவை. தண்ணீர் தேங்கும் இடம் கூடாது. ஒரு சதுர மீட்டர் அகலம் மற்றும் ஆழத்தில் குழி எடுத்து, அதில் நன்கு உலர்ந்த மாட்டுச் சாணம், எறும்புப் பொடி, வேப்பம் புண்ணாக்கு மிக்ஸ் செய்து, ரம்புட்டான் செடியை நட வேண்டும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செடி நடுவது நல்லது. இந்த சீசனில் மழை அதிகமாக இருக்கும் என்பதால், எளிதாக செடி வளரும். செடி வளர ஆரம்பித்ததும், பக்கக் கிளைகளை கவாத்து முறையில் வெட்டி விட்டால், அது, பரந்து விரிந்து வளரும்.
ரம்புட்டான் மரத்தை பொறுத்தவரை நோய் தாக்குதல் குறைவு. நமக்கு செலவு என்று பார்த்தால், வருடத்துக்கு மூன்று முறை உரம் போடுவதும், அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சுவதும் தான்.மூன்றாவது ஆண்டில் குறைந்த அளவிலே காய்களே கிடைக்கும். வருடம் செல்லச் செல்ல, அதிக அளவில் காய்கள் கிடைக்கும்.
ஒரு மரம் நன்கு விரிந்து வளர, ஒன்று முதல் இரண்டரை சென்ட் நிலப்பரப்பு தேவைப்படும். வீட்டின் முன்புறமோ, பின்பிறமோ இடம் இருந்து, அந்த இடத்தில் சூரிய ஒளி கிடைக்குமாயின், தாராளமாக ரம்புட்டான் செடியை நட்டால், மூன்று முதல் ஐந்து ஆண்டு
களுக்குப் பின், மரமாகி பலன் தரும்.சீசன் துவங்கும் போது, கிலோ ரம்புட்டான் பழம், 420 ரூபாய் வரை மார்க்கெட்டில் விலை போகும். என்னிடமிருந்து வியாபாரிகள் கிலோ, ௨௦௦ ரூபாய் என்ற கணக்கில் வாங்குவர்.
சராசரியாக, 80 முதல் ௨௦௦ கிலோ எடை உடைய ரம்புட்டான் பழங்கள், ஒவ்வொரு மரத்தில் இருந்தும் எனக்கு கிடைக்கும். ஒரு மரத்தில் இருந்து, ௪௦ ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் வருமானம் கிடைக்கும். ௨௫ மரங்களில் இருந்து எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை, நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.செலவு என்று பார்த்தால், 25 மரங்கள் வைப்பதற்கு குழி தோண்ட, உரம் போட என, ஆரம்ப கட்டமாக 1 லட்சம் ரூபாய் தேவைப்படும். அதன்பின், ஆண்டுதோறும் களை எடுப்பதற்கு, தண்ணீர் பாய்ச்சுவதற்கு, உரம் போடுவதற்கு என, 1 லட்சம் ரூபாய் வேண்டும். தொடர்ந்து, ௨௫ மரங்களை பராமரிக்க, ஆண்டுக்கு 1லட்சம் ரூபாய் தேவைப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பின், ௨௫ மரங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் வருமானம், ௧௦லட்சம் ரூபாய்.
No comments:
Post a Comment