கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் விண்ணப்பிப்பவர்களுடைய அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெறாதது குறித்து நீதிபதிகள் அறநிலையைத் துறைக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை தரப்பு வக்கீல், கடந்த விசாரணையின் போது, தெய்வ பக்தி கொண்டவர், அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன், அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வி கண்டிப்பாக சேர்க்கவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினர். மேலும் அறங்காவலர் தேர்வுக்காக மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment