Wednesday, January 11, 2023

ஸர்வம்_கிருஷ்ணார்ப்பணம்

  புதிது புதிதாக ஷீரடி சாய் பாபாவிற்கு கட்டப்பட்ட கோவில்களில் சிவலிங்கம், விநாயகர், அம்பாள் மற்றும் இதுபோன்ற தேவர்களின் சன்னதிகள் வைத்து வழிபாடு செய்கிறார்கள்.

அவ்வாறு தெய்வங்களை பிரதிக்ஷ்டை செய்யும்போது சாய்பாபாவை பிரதானமாக வைத்து மற்ற தேவர்களையும் மற்றும் முழுமுதற் கடவுளரகளான பகவான் ஸ்ரீகிருஷ்ணர்/ சிவனைக்கூட பாபாவை விட கீழே பிரதிஷ்டை செய்கிறார்கள். இது மிகவும் #தவறான செயல். #தறக்குரைவான செயல். மகா #பாபமும் கூட. #கண்டிக்கபட வேண்டியதும் கூட.
பாபா என்பவர் மனிதராக இருந்தவர். அவர் குறைந்த ப‌ஷம் ஒரு ஹிந்து கூட இல்லை. ஆனால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஏனைய தெய்வங்கள் அப்படி அல்ல.
பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு சிவனுக்கோ சமமாக தேவர்களையே வைக்கக் கூடாது. பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும் சிவனுக்கும் கீழேதான் அனைத்து தேவர்களும்.
ஆனால் தேவர்களோ பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உயர்ந்த சேவகர்கள். அப்படியிருக்க பாபாவை பிரதானமாகக் கொண்டு கட்டப்படும் கோவில்களில் பணமே பிரதானமாக இருக்கிறது என்பதால் சமீபகாலமாக இவ்வாறு அதிக அளவில் கட்டப்பட்டு வருகிறது. பாபாவிடம் இருந்து வரும் நிவேதனனங்களும் ஆரத்திகளும்தான் இதர ஸ்வாமிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதற்கு சில எடுத்து காட்டு எண்ணெய், ஊதுபத்தி, சாம்பிராணி, சூடம், பிரசாதம் போன்றவை பாபாவிடம் இருந்து தான் வருகிறது. இது மிகவும் தவறான மற்றும் வன்மையாக #கண்டிக்கத்தக்க செயல்.
முதலில் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு சிவபெருமானுக்கு ஆரத்தி மற்றும் நிவேதனனாதிகளை செய்து விட்டு பிறகு பிரம்மா துர்க்கை போன்றவர்களுக்கு அளித்த பிறகே பாபா போன்றவர்களுக்கு வழங்கலாம். ஆனால் தற்போது நடைபெறுவது எப்படி என்றால் பாபாவிற்கு செய்த பிறகுதான் மற்ற சன்னதிகளுக்கு நடைபெருகிறது. இது மிகப் பெரிய பாபம். #கண்டிக்கத்தக்கதும் கூட…
மேலும் பழைய சிவன் கோவில், ராமர் கோவில் ஆகியவற்றை இவர்கள் எடுத்து நிர்வாகம் செய்து அதில் பாபாவை பிரதிஷ்டை செய்து நாளடைவில் பாபாவை பிரதானமாக வைத்து விட்டு இறைவனை வழிபடுவதை குறைத்து விடுவது மிகவும் வேதனையான விஷயம்.
அடியேனின் மனக்குமுறல் வேதனை எங்கு சொல்வது யாரிடம் சொல்வது. இவைகளை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் கண் கலங்கும் யாம் ஒரு கிருஷ்ண/ சிவ பக்தன். தயவு செய்து இனி அப்படி செய்யாதீர்கள்.
இந்த கலியுகத்தில் ஹரிநாம சங்கீர்த்தனம் மற்றும் நமச்சிவாய நாமமே முக்தியடைய வழி. மற்றவை அல்ல.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...